பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு * 2& சாலை வந்து இக்காட்சிகளைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன்; வியப்பும் ஏற்பட்டது. சுமார் நான்கு மணி நேரம் ஊர்வலக்காட்சி நடைபெற்றதாகவும், பின்னர் ஊர்வலம் ஊருக்கு வடபுறம் உள்ள சுடுகாட்டில் முடித்த தாகவும், இரண்டு கொடும்பாவிகளையும் ஈமப்படுக்கை யில் சேர்த்து வைத்து எரியூட்டியதாகவும் செய்தி பரவியது. இந்தப் பிரளய நிகழ்ச்சி க்குக் காரணம் என்ன?எவரை யும் வினவியறிய மனம் துணியவில்லை. பலரது பேச்சுக் களைக் கவனித்ததில் நான் அறிந்து கொண்டவை:து.வே. ாதி வெறி மிக்கவர். கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை பலிஜ வகுப்பினரையே நியமிக்கவே விரும்புபவர். ஆட்கள் கிடைக்காவிட்டால்தான் வேறு சாதியினரை நியமிப்பார். இப்படிச் செய்தாலும் திறமையற்றவர்கட்கு இடம் கொடார் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியா. வேறு சாதியினரிலும் திறமையானவர்களையே தேர்ந்தெடுப்பார் பல்கலைக்கழகம் சிறப்புடன் வளர்ந்து திகழவேண்டும் என்பதே இவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது என்பதையும் மறுத்தற்கில்லை. ஒருசமயம் மருத்துவக்கல்லூரி ஆண்டுவிழாவுக்குத் தலைமை வகித்துப் பேசும்போது எவர் ஒருவர் உயர் பதவியில் இருக்கும் போது அவரவர் சாதியினரை, ஆதரித்து நியமனம் செய்வ தில் தவறு இல்லை’ என்று பேசி விட்டார். ஏற்கெனவே சாதி வெறி பிடித்தவர் என்று குமுறிக் கொண்டிருந்த சமூகம் எதிர்ப்புச் சக்திகளை ஒன்று திரட்டி இப்படி ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை அறிந்தேன். ஆந்திர அரசின் சட்டமன்ற மேலவையிலும் உறுப்பினராக இருந்த இவரை ஆளுங் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் சேர்ந்து வற்புறுத்தி இவரை மேலவைக் கூட்டம் ஒன்றில் மருத்துவக் கல்லூரியில் கூறியதற்கு மன்னிப்பு கோரும்படி செய்தார்கள் என்று பேசிக்கொண்டதும் என் செவியில் பட்டது. ம நி-9