பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு 翌3芷 மூன்றாவது முறை துணைவேந்தர் பதவி இவருக்கு வேண்டா என்பது இறைவனது சங்கற்பம் போலும். நினைவு 4 : நான் குடும்பம் இன்றித் தனியாக இருந்தமை, வகுப்பில் சரியாக வேலையில்லாமை இவை தந்த துன்பம் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லுவதற் கில்லை. இதற்குச் சரியான மருந்து இலக்கிய நுகர்ச்சி. இதற்கு முத்தொள்ளாயிரத்தைத் தேர்ந்தெடுத்து நுகரத் தொடங்கினேன். ஒவ்வொரு பாடலையும் திண்ணனார் இறைவனுக்குப் படைக்கப் பெற்றப் பன்றி இறைச்சியைச் சுவைத்தது போல், டி. கே. சி. பாடல்களைச் சுவைத்து மகிழ்வதைப்போல், சுவைத்து மகிழ்ந்தேன். இந்த அநுபவத்தை எழுத்துவடிவமாக்கினேன். இந்தப் படையல் அற்புதமாக அமைந்தது. இதனைப் பதிப்பாசிரியர் சக்கர வர்த்தி டாக்டர் உ. வே. சரமிநாத அய்யருக்கு அன்புப் உடையலாக்கினேன். துணைவேந்தர் நாயுடு அவர்கள் அநுமதித்த தொகையால் பல்கலைக்கழக வெளியீடாக (1965 வெளிக்கொணர முடிந்தது. அறியதோர் ஆங்கில நூல் முகம் (Preface) இந் நூலை அலங்கரிக்கின்றது. நினைவு-5 : ஒருநாள் எதிர்பாராத வண்ணம் கல்லுரரி முதல்வரிடமிருந்து ஒரு பரிந்துரையின் நகல் வந்தது. அதில் திரு. ந. சுப்புரெட்டியார் (தமிழ் விரிவுரையாளர்) தெலுங்குத் துறையிலோ அல்லது வட மொழித் துறையிலோ இணைக்கப்படவேண்டும்' என்று குறிக்கப்பெற்றிருந்தது. இந்த நகல் வந்த நேரம் மாலை 4-90 மணி; வீட்டிற்குத் திரும்பும் நேரம். இது முதல்வர் பல்கலைக் கழகத்திற்குச் செய்த பரிந்துரை. இரவு முழு வதும் உறக்கம் சரியாக இல்லை: அதிகாலையில் எழுந்து காலைக் கடன்கள், குளியல், சிற்றுண்டி இவற்றை விரை வாக முடித்துக் கொண்டு சுமார் 8-மணிக்கு முதல்வர் டாக்டர் பம்பாபதி ராவ் இல்லத்திற்கு விரைந்தேன். அவர் இன்முகத்துடன் வரவேற்றுக் காஃபி வழங்கினார். நான் சற்றுப் படபடப்புடன் இந்தப் பரிந்துரையின் உள்நோக்கம்