பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 36 மலரும் நினைவுகள் சொன்னேன். கும்பகோணும் வழி என்றால்?’ என்று கேட்க, நான் இன்னும் ஆறு மாதத்தில் அதைத் தெரி விப்பேன். சென்னைவாசியான தங்கட்கு இது தெரியா மலிருக்க முடியாது’ என்று சொல்வி விடைபெற்றுக் கொண்டேன். சோதிடர், கவிஞர், திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னது மனத்தை நெருடிக் கொண்டே இருந்தது. ரெட்டியார் அவர்களே, கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து ஆராய்ந்ததில் உங்கட்கு மேற்படிப்பு இல்லை என்று தெரிகின்றது. ஆனால் நீங்கள் இலேசில் விட மாட்டீர்கள். ஏழுமலையான் திருவடி வாரத்தில் வசிக் கின்றீர்கள். அவன் அருளால் உங்கள் முயற்சி வெற்றியில் கொண்டு செலுத்தினும் செலுத்தலாம். விடாது முயலுங்கள்’’ என்று சொல்லியிருந்தார். என் சிறுவயது முதல் என் இதயத்தில் எழுந்தருளியிருப்பவன் முருகன். நாளென் செயும்வினை தானென் செயும்.எனை நாடிவந்த கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னே வந்து தோன்றி.டினே. - கந்தரலங்காரம்- 38 என்று அருணகிரியாரின் வாக்கை தினைந்து செயலாற்றத் தொடங்கினேன். கும்பகோணம் ஓமியோபதி நிறுவனத்திற்கு எழுதி அஞ்சல்வழிக் கல்விமூலம் ஓமியோபதி மருத்துவம் பயின்றேன். இந்தத் தேர்வை ஒர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரின் முன்னர் எழுத வேண்டும். நான்