பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு 盟37 1960-65 வரை விடுமுறைக் காலங்களில் காரைக்குடி யில் இருந்து வந்தேனாதலால் என் அரிய நண்பர் காரைக்குடி நகராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு. V. சொக்கலிங்கம் பிள்ளையின் முன்னர் தேர்வு எழுதினேன். இரண்டு மாதங்களுக்குள் என் தேர்வு வெற்றியும் அறிவிக்கப் பெற்று சான்றிதழும் பெற்றேன். ஒருநாள் வழக்கம்போல் காலையில் துணை வேந்தர் நாயுடு அவர்களைக் சந்தித்துச் சான்றிதழை அவர் முன் வைத்துக் கும்பகோணம் வழி மூலம் டாக்டர் பட்டம் பெற்றதை எடுத்துக் கூறினேன். இனி பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டத்தின்மீது அக்கறை இல்லை என்றேன் சிரித்துக் கொண்டே, உடனே துணைவேந்தர் பிஎச் டிக்கு பதிவு செய்ய உடனே விண்ணப்பம் அனுப்புங்கள். உங்கள் கவலையையும் ஆர்வத்தையும் இப்போது அறிகின்றேன்' என்றார். மறுநாளே உரிய முறையில் விண்ணப்பம் தயாரித்து வடமொழித் துறை துணைப் பேராசிரியர் டாக்டர் W. வரதாச்சாரியை வழிகாட்டியாக இருக்க இசைவு பெற்றேன். பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலின் திவ்விய தேசத்தில் வாழவழி வகுத்த அவனைப்பற்றியே ஆராய நினைத்து நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவம் (Religion and Philosophy of Nalayira Divya Prabandham with Special Reference to Nammazhwar) 5T séro Gso Goo GL ஆய்வுப் பொருளாகத் தேர்ந்து எடுத்துக் கொண்டு ஆய்வைத் தொடங்கினேன். நினைவு -7; நான் திருப்பதியிலிருந்தபோது தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற நூலை முடித் தேன். காரைக்குடியிலிருந்த போதே தொல்காப்பியப் பொருளதிகாரம் பற்றிய பத்துக் கட்டுரைகள் அமுதசுரபி" என்ற திங்கள் இதழில் வெளி வந்திருந்தன. இவற்றைத் தொடர்ந்து மேலும் 24 கட்டுரைகள் எழுதப் பெற்று 34