பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மலரும் நினைவுகள் கட்டுரைகளாக வெளி வந்ததே இந்நூல் (மார்ச்சு-1964). இதனைத் திருநாயுடு அவர்கட்கு, ஆங்கிலக் கலைஞன், சீர்த்துணை வேந்தன்; அன்பெனும் தேன்பொதி உளத்தன்; வேங்கடே சுவரன் பல்கலைக் கழக விளக்கினை மேதகத் துரண்டிப் பாங்குறு கலைமான் முகத்தொளி கண்டோன்; பண்புறு கோவிந்த ராசன் ஓங்குதற் புகழோன் திருவடி மலரில் ஒளி மணம் பெறுகஇந் நூலே . என்ற பாடலின் மூலம் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்’ இடம் பெறச் செய்து அதன் வளர்ச்சியில் கடைக்கண் நோக்கத் தை'க்கொண்ட இப்பெருமகனாருக்கு இந்த நூலைப் படைத்தது பொருத்தந்தானே. மூன்றாவது முறை துணைவேந்தர் பதவி நீட்டிக்கப் பெறாமல் திரு நாயுடு அவர்கள் ஒய்வு பெற்றார்கள். சென்னையில் நிரந்தரமாகக் குடியேறி விட்டார்கள். ஒய்வு பெற்ற இரண்டு திங்களுக்குள் ஒருமுறை திருப்பதிக்கு வந்தார்கள். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இவர்மீது கொண்டிருந்த அன்பிற்கு அறிகுறியாக நிதி திரட்டி விருந்தளித்து நினைவுச்சின்னம் வழங்க ஏற்பாடு செய் திருந்தார்கள். ஒரு பல்கலைக்கழகத்தின் இதயமாக இருப்பது அதன் நூலகம் என்று கருதினார் திரு நாயுடு; இரவு பகல் என்று பாராது ஓயாது உழைத்து முதற் பணி யாக நூலகக் கட்டடத்தை முடித்து வைத்தார்; அனைத்தும் அதற்கடுத்தவை எனக் கருதினார். இதனால் வெள்ளியால் இக்கட்டடம் போன்ற ஒரு நினைவுச் சின்னத்தைத் தயாரித்து ஒரு பெரிய விருந்துடன் இதனை வழங்கி இவரைச் சிறப்பித்தார்கள். இந்த நினைவுச் சின்னம் இவருக்கு மனநிறைவு தந்திருக்க வேண்டும். தன்