பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏全盘 மலரும் நினைவுகள் வேலூரிலிருந்து 100க்கு மேற்பட்ட ஆண்டுகட்கு முன்னர் ஐதரபாத் நிஜாம் அரசின் பணியேற்று அங்கேயே நிரந்தர மாக குடியிருந்து வரும் முதலியார் குடி வழியில் வந்தவர்.) டாக்டர் முதலியார் டாக்டர் வாமன் ராவுக்கு நேராகக் கடிதம் எழுதித் திரு. நாயுடு அவர்கட்கு உதவும் கருத்தைத் தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. தம்முடைய தனி எழுத்தரைக் கொன் எழுதச் செய்தார். தாம் எழுதினால் தம் மதிப்பிற்குக் குறைவாகும் (infradig) என்று கருதினார் போலும் இதை என்னுடன் நன்கு பழகி வந்த டாக்டர் 鑫 مارتین: வாமனராகவே சொன்னது) . ஆனால் டாக்டர் ராவ் டாக்டர் ஏ. எல். முதலியாரை நன்கு மதித்துப் பதிவாளர் மூலம் உதவுவதற்கில்லை; நிறுவனத்தின் நிதி நிலைமை இடந்தரவில்லையே' என்று வருத்தத்துடன் கடிதம் அனுப்பச் செய்தார். இதனைக் கேட்டபோது, பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் - வெற்றிவேற்கை, 18,19. என்ற அதிவீரராமபாண்டியனின் அநுபவம்மிக்க அமுத மொழிகளை நினைத்துக் கொண்டேன். திருப்பதியில் விருந்து நடைபெற்ற போது திரு நாயுடு அவர்களைக் பார்த்ததுதான் கடைசிமுறையாக இருந்தது. அதன்பிறகு அவர் திருநாடு அலங்கரித்தசெய்தியைத் தான் நாளிதழ் களில் பார்த்தேன்; வருந்தினேன். படுமழை மொக்குளில் பல்காலும் தோன்றி கெடுமிதோர் யாக்கை -நாலடி-27 என்ற சமண முனிவரின் திருவாக்கை நினைத்துக் கொண்டேன். [] 다. D