பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு 芷4贾° டாக்டர் W. C. வாமன்ராவுக்குப் பிறகு (1964-69) துணைவேந்தராக வந்தவர் டாக்டர் D ஜகந்நாதரெட்டி. துடிப்பிலும் செயலாற்றும் திறனிலும் திரு நாயுடுவிற்கு நிகர்ந்தவர் டாக்டர் ரெட்டி . * பாம்பின் தால் பாம்பறியும்’ என்ற முதுமொழிக்கிணங்க திருதா புடுவின் அரும்பணியைப் போற்ற நினைத்தார். பல்கலைக்கழகத் தில் கட்டடப் பணியை நிறைவேற்றுவதில் திரு நாயுடு அவர்களை விசுவகர்மா என்றால், டாக்டர் ரெட்டியை மயன் என்று சொல்லலாம். பல்கலைக்கழக முன்னேற்றத் திற்கு அல்லும் பகலும் ஓயாது உழைத்த உத்தம சீலர்கள் இவர்கள். டாக்டர் ரெட்டி பதவியேற்றதும் இத் திரு வேங்கடவன் பல்கலைக் கழகம் தோன்றுவதற்கு முதற் காரணமாக இருந்த ஆந்திரகேசரி பிரகாசம்பந்துலுக்கும், நீலம் சஞ்சீவி ரெட்டிக்கும், இப்பல்கலைக்கழகம் சீருடனும் சிறப்புடனும் வளர உழைத்த முதல் துணைவேந்தர் திரு நாயுடு அவர்கட்கும் நினைவுச்சின்னங்கள் அமைக்க எண்ணினார். தம் காலத்தில் எழும்பிய நிர்வாகக் கட்டடத்திற்கு நீலம் சஞ்சீவ ரெட்டி பவனம் என்று திரு நாமம் சூட்டினார் டாக்டர் ரெட்டி. ஏனைய இரு பெரியார்களின் நினைவுச் சின்னங் களை மாணவர் இயக்கத்தைக் கொண்டு, எழுப்ப நினைத்தது டாக்டர் ரெட்டியின் பேருள்ளம்; சீருள்ளம். பல்கலைக் கழகம், பல்கலைக்கழக ஆட்சிக்குட்பட்ட கல்லூரிகள் இவற்றில் சேரும் மாணவர்களிடம் ஒரு ரூபாய் நன்கொடையாக வசூலிக்கச் செய்தார். பல துளி பெரு வெள்ளம் போல் நிதிதிரண்டது. நிர்வாகக் கட்டடத்திற்கு அருகில் நேராக நெடுஞ்சாலையிலிருந்து பல்கலைக் கழகத் திற்குப் பிரிந்து வரும் குறுஞ்சாலையை நோக்கியவண்ணம் ஆந்திர கேசரியின் சிலையை நிறுவச் செய்தார். அங்ங்னமே நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து நூலகத்தை நோக்கி வரும் குறுஞ் சாலையை நோக்கிய வண்ணம் திருநாயுடு (முதல் துணைவேந்தர்) அவர்களின் சிலையை நிறுவச் செய்தார்.