பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மவரும் நினைவுகள் உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. (குறள் - 105) என்ற குறளை நினைக்கச் செய்கின்றன டாக்டர் ரெட்டி யின் பெருஞ் செயல்கள். டாக்டர் ரெட்டியின் காலத்தில் எழுந்த கட்டடங் களுள் மிகப் பெரியது, இனியது (கந்தழிவரை) வெட்டு வளைவு (Hyperbola) வடிவத்திலுள்ள கேள்வியரங்கு (Auditorium), டாக்டர் ரெட்டி காலத்தில்தான் இதன் வேலை முற்றுவிக்கப்பெற்று ஆந்திர மாநிலக் கல்வி அமைச்சர் திரு. M. V. கிருஷ்ணராவ் அவர்களால் திறந்து வைக்கப் பெற்றது. திறப்பு விழாவில் டாக்டர் ஜகந்நாத ரெட்டியின் கடும் உழைப்பையும் அருந்தொண்டினையும் பலபடப் புகழ்ந்து பாராட்டினார் அமைச்சர். இந்தக் கேள்வியரங்கிற்கு "டாக்டர் ஜகந்நாத ரெட்டி கேள்வியரங்கு என்று திருநாமம் சூட்டி நினைவுச் சின்ன மாக்கலாம் என்றும் பரிந்துரைத்தார் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு. ஆனால் அப்பரிந்துரை செயற்படுத்தப் பெறவில்லை. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள்-110) என்ற குறள் மண்டபத்தைக் காண்போர் கருத்தில் குமிழி யிட்ட வண்ணம் உள்ளது.