பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திரு. ஏ.கே. செட்டியார் 1946 என்று நினைக்கின்றேன். நான் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாக வேலை பார்த்த காலம். ஒருநாள் முற்பகல் பதினொரு மணி இருக்கும். அகண்ட ந்ெ ம்றி, மூக்குக் கண்ணாடி அணிந் திருந்தாலும் கூரிய பார்வை தெரியுமாறு அழகிய கண்கள், அழ்கான திருமுக மண்டலம், அரைக்கைக்குமேல் சற்று நீண்ட வெள்ளைக் கதர் சட்டை, நான்குமுழக் கதர் வேட்டி இவையெல்லாம் கலந்த தோரணையில் ஒருவர் வந்து சேர்ந்தார். பார்த்தவர்களை ஈர்க்கக்கூடிய புன்முறு வலுடன் காணப்பட்டார். நேராக அலுவலகத்திற்கு தான் வந்தார். மாணவர்களைச் சேர்க்கும் காலம் கடந்து விட்டது. ஆதலால் பையனைச்சேர்ப்பதற்கு வந்தவர் என்று தோன்றவில்லை. தங்களை யார் என்று தெரிந்து கொள்ளலாமா?’ என்று அடக்கமாகக் கேட்டேன். நான் ஒரு நாடோடி’ என்று மறுமொழி வந்தது. புரிய வில்லையே’ என்றேன். பின்னர் உலகம் சுற்றிய தமிழன்!” என்று விளக்கம் வந்தது. அப்பொழுது 'இப்படி ஒரு நூலைப் படித்து அதுபவித்திருக்கின்றேன்; அந்த நூலின் ஆசிரியரா?' என்று வினவினேன். ஆம்’ என்றார்கள். பின்னர் எழுந்து மரியாதையாக வணக்கம்! " என்று கை கூப்பி வரவேற்றேன். இப்படியாக எனக்கு • உலகம் சுற்றிய தமிழன்’ திரு ஏ. கே. செட்டியார் அறிமுகமானார்.