பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மலரும் நினைவுகள் அவர் எழுதிய நூலில் ஆசிரியருடைய ஒளிப்படம் கூட. இல்லை. அப்படியொன்று நூலை அலங்கரித்திருந்தால் ளிைல்iமயாக அவரை அடையாளம் கண்டு கொண் டிருப்பேன். நூலைப் படித்தபோது நூலாசிரியரைப் பற்றி நான் கற்பனையில் கணித்திருந்த உருவம் வேறு வகை யிலும் இப்போது நான் காணும் உருவம் மிக எளிமையாக வும் இருந்தபடியால் பெருத்த ஏமாற்றம் அடைந்தேன். பல நாடுகளில் சுற்றி வந்தவர் கார் முதலான வாகன வசதி: களுடனும் மேல் நாட்டுப் பாணியில் உடைகளை அணிந்த வராகவும் இருப்பார் என்றும், அளவற்ற ஆங்கில மோகம் பேச்சில் தாண்டவமாடும் என்றெல்லாம் நினைத்திருந் தேன். குளிர் பானம் தருவிக்கட்டுமா?’ என்று வின வினேன். ஒன்றும் தேவை இல்லை’ என்று கூறிவிட்டார். பள்ளி ஊரை விட்டு ஆறு ஃபர்லாங் தொலைவிலிருந்த தால் எதனையும் உடனே தருவிப்பதென்பது மிகச் சிரம மாக இருக்கும். என் இல்லம் பள்ளிக்கட்டடத்திற். குள்ளேயே இருந்தமையால் எலுமிச்சை பழம் பானம்’ தருவித்து வழங்கினேன். பகலுணவு என் இல்லத்தில்; மரக்கறி உணவு தான் ஏற்றுக் கொள்ளலாமா?’ என்று கேட்டேன். அன்புடன் தருவதால் எதுவும் ஏற்பேன். தவிர, நானும் மரக்கறி. உணவு உண்பவன் தான்’ என்றார். பிற்பகல் மூன்றரை மணிக்கு மாணவர்கள்-ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒரு மணி நேரம் உரையாற்ற வேண்டும்’ என்று வேண்டினேன். ஒப்புக் கொண்டார்கள். உணவுக்காக வீட்டிற்கும் தகவல் அனுப்பினேன். பள்ளி உதவியாள் P. முத்துசாமி பக்கத்து வீட்டிலிருந்து இரண்டு வாழை இலையும் கொண்டு வந்து விட்டான். வெட்டிக் கொண்டு வா’ என்றால் அவன் கட்டிக் கொண்டு வந்து விடுவான். உடனே திரு செட்டியாரவர்களை ஆசிரியர்கள் அறைக்கு இட்டுச் சென்று ஒய்வாக இருந்த தமிழாசிரியர் வீ.சி.கிருஷ்ணசாமி, ஒவிய ஆசிரியர் K.சேதுராமன், இடைநிலை ஆசிரியர்கள்