பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. ஏ. கே. செட்டியார் 夏垒莎 T.S. இராமய்யா நாயுடு, W.S. உமாபதி ஆகியோருக்கு அறிமுகம் செய்து வருந்தியழைத்தாலும் வாராத விருந் தினர் நம் பள்ளிக்கு எழுந்தருளியிருக்கின்றார் விதுரன் திருமாளிகைக்குக் கண்ணன் எழுந்தருளியது போல்’ என்று கூறினேன். பிற்பகல் மூன்று மணிக்கு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாமா?’ என்று யோசனை கேட்டேன். "அவசியம் செய்ய வேண்டும்’ என்று ஒரு மனதாக உரைத் தார்கள். உடனே எல்லா வகுப்புகளுக்கும் கூட்டம் பற்றிய சுற்றறிக்கையை அனுப்பச் செய்தேன். மூன்று அழைப்பிதழ் எழுதச் செய்து கையெழுத்திட்டு மிதிவண்டி வைத்திருந்த மூன்று மேல்வகுப்பு மாணவர்களைத் தேர்த்தெடுத்து கடைவீதியிலுள்ள முக்கியமானவர்களை அழைக்குமாறு: இருவரையும், சேடத் தெருவிலுள்ள முக்கியமானவர் களையும் அழைக்குமாறு ஒருவரையும், அனுப்பி வைத் தேன். பள்ளிக்கு எதிரிலுள்ள மாவட்ட நீதி மன்றத்திற்கு ஒருவரை அனுப்பி வக்கீல் P. அரங்கசாமி ரெட்டியாருக்கும். தகவல் அனுப்பினேன். பெரும்பாலும் இம்மாதிரியான சிறப்பு நிகழ்ச்சிகட்கு ஏற்பாடு செய்யும் முன்னர் ஆசிரியர்களைக் கலக்காமல் எதுவும் செய்வதில்லை. இதனால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிக நன்றாக அமைந்தது. என்னுடைய செயல் ஒவ்வொன்றும் மாணவர்கள் நலனுக்காக என்றே மேற்கொள்ளப்பெற்றதால் மேல் வகுப்பிலுள்ள பல நல்ல மாணாக்கர்கள் எல்லாவித கூட்டங்கள் நன்கு நடைபெறு வதற்கும் ஒத்துழைத்தனர். அக்காலத்தில் நான் மேற். கொண்ட ஒவ்வொரு செயலும் இன்றும் என் நினைவில் பசுமையாகவுள்ளது. சிறிய விருந்துதான். என்ன செய்வது? அதுவும் திடீ ரென்று ஏற்பாடு செய்தால் அதற்கேற்றபடி தானே அம்ை யும்? குருவிக்குத் தகுந்த இராமேசுவரம்தானே. திரு செட்டியாரவர்கள் மிக்க மகிழ்ச்சியாக உண்டார்கள். உணவு விடுதியிலிருந்து எடுப்பு’ எடுத்து வர ஏற்பாடு ம.நி-10,