பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மலரும் நினைவுகள் செய்தாலும் இப்படி விருந்து அமையாது என்பது அது பவத்தால் அறிந்து கொள்ள முடிந்தது. திரு செட்டியாரை என் இல்லத்திலேயே ஒய்வுகொள்ளச் செய்துவிட்டுப் பள்ளி அலுவல்களைக் கவனிக்கச் சென்று விட்டேன். இலக்கியக் கூட்டம் : நான் துறையூரில் பணியாற்றிய காலத்தில் அடிக்கடி இலக்கி:க் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துவந்ததால் பள்ளியிடம் பொதுமக்கள் தொடர்பு நன்றாக இருந்தது. அழைப்பும் அறிவிப்புகளும் அனுப்பி வைத்தால் 100 பேருக்குக் குறையாமல் ஊர்ப்பெருமக்கள் திரள்வார்கள். திரு. செட்டியார் பேசிய கூட்டத்திற்கு இருபத்தைந்து பேர்களுக்குக் குறையாமல் ஊர்ப்பெரு மக்கள் வந்திருந்தனர். ஆசிரியர்கள் இருபது பேர். இரண்டுமணி நேர அறிவிப்பினால் இவ்வளவுபேர் திரண்டு விட்டனரே என்று திரு. செட்டியார் அவர்களும் அதிசயித்தார்கள். கூட்டத்தைக் கண்டதும் செட்டியார் அவர்கட்கும் உற்சாகம் கிளம்பி விட்டது. நூலகத்திலிருந்து உலகம் சுற்றிய தமிழன்’ என்ற நூலை எடுத்து வந்து கையில் தயாராக வைத்திருந்தேன். அதைக் கூடியிருந் தோருக்குக் காட்டி அதிலுள்ள கருத்துகளை பத்து நிமிடம் எடுத்துரைத்து என் வரவேற்புரையை முடித்துக் கொண்டேன். பயனநூல்கள் தமிழில் அத்திபூத்த மாதிரி என்பதை எடுத்துக் காட்டினேன். பயண நூல் சுவையாக எழுதுவதற்கு இவருக்கு நிகர் இவரே என்பதை வற்புறுத்திக் கூறினேன். திரு. செட்டியாரவர்களின் எளிமையான தோற்றமே கூடியிருந்தோரைக் கவர்ந்தது. இவ்வளவு அரிய நூலை எழுதியவர் இவ்வளவு எளிமையாக இருக்கின்றாரே' என்று மக்களும் ஆசிரியர்களும் வியந்தனர்; மாணவர் களும் அதிசயித்தனர். திரு. செட்டியாரவர்கள் பல நாடுகட்குச் சென்று சுற்றிப் பார்த்தபோது நேரில்கண்ட காட்சிகள், பல பெரியோர்களிடம் ஏற்பட்ட உறவு கள், பல இடங்களில் தங்கினதில் ஏற்பட்ட அநுபவங்கள்,