பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. ஏ. கே. செட்டியார் 夏盛7 பல்வேறு உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்டமைஇவற்றையெல்லாம் நகைச்சுவை தோன்ற அற்புதமாக எடுத்துரைத்தார்கள். நேரிட்ட தொல்லைகளையும் துன்பங்களையும் சிரிக்கச் சிரிக்க எடுத்துரைத்தார்கள். 'இடுக்கண் வருங்கால் நகுக' (குறள்-621) என்ற குறளுக்கு எடுத்துக்காட்டுகள் போலிருந்தன. ]வர் சமாளித்த முறைகளைக் கூறும்போது புவியியல், வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள் தாம் கூறும் நிகழ்ச்சிகளை இப்படியல்லவா கற்பிக்கவேண்டும் என்று கூறுவது போலிருந்தது இவர் பேச்சு? அருச்சுனன் மேற்கொண்ட தீர்த்த யாத்திரையை வில்லிபுத்துாராழ்வார் வருணிப்பது' போலிருந்தது இவர் உரை என்றும் சொல்லிவைக்கலாம். சிறுசிறுநிகழ்ச்சிகளையும் நகைச்சுவையுடனும் கற்பனை தயத்துடனும் எடுத்துக்காட்டி விளக்கினது மாணவர்கள் இவருடன் சுற்றுலாவை மேற்கொண்டது போலிருந்தது: தம்மை மறந்த நிலையில் இவர் உரையில் ஈடுபட்டு மகிழ்ந்தார்கள். திரு: செட்டியாரவர்களும் தாம் இங்கு பேசியதுபற்றி முழுமையான மனநிறைவு கொண்டார்கள். மாலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு சுமார் 5.30 க்கு திருச்சி செல்லும் பேருந்தில் முன்வரிசையில் ஏற்றி அனுப்பி வைத்தோம். என் அரிய நண்பர் மணவாளன் (வண்டியோட்டி) அவரை அவர் இறங்கும் இடத்திற் கருகில் இறக்கிவிடுவதாகக் கூறியது எனக்கும் மகிழ்ச்சியைத் தந்தது, பேருந்தில் ஏற்றியபோது குமரி மலருக்கு பள்ளியின் பேரில் ஐந்து ஆண்டுச்சந்தாவை வற்புறுத்திச் செட்டியார் அவர்களின் கையில் சேர்ப்பித்தேன். இந்த நாளிலிருந்து திரு . செட்டியாரவர்களின் நட்பு ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றியது, 1949-50 ஆண்டுகளில் அடிக்கடி சென்னை போய்வரும் 1. வி. பா : அருச்சுனன் தீர் த் த யாத் தி ைர ச் சருக்கம் 11-20