பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii இந்திராகாந்தி அமைச்சரவையில் சீரும் சிறப்புடனும் பணியாற்றியதை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் போற்றிப் புகழ்ந்ததையும் அறிந்து மகிழ்ந்ததுண்டு. இவருடைய தி ற ைம ைய யு ம் நேர்மையையும் பாராட்டும் வகையில் குடியரசுத் தலைவராகப் பணியாற்றி வருவதை நாம் கண்டு களிக்கின்றோம். நம் அருமை இராஜாஜிக்குப் பிறகு நாற்பதாண்டு காங்கிரசு ஆட்சியில் ஒரு தமிழர் குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருப்பது தமிழர்கள் அனைவருக்குமே அளவற்ற மகிழ்ச்சியை அளிக் கின்றது. தஞ்சை மாவட்டம் நீர் வளம் நிலவளத்துடன் மனித வள மேம்பாட்டுக்கும் பேர் போனது என்பதை இவரால் நாம் அறிய முடிகின்றது. தமிழகம் முழுவதும் இவர் சீருடனும் சிறப்புடனும் பணியாற்றுவதைக் கண்டு பெருமிதம் அடைகின்றது. இந்தப் புகழ்ச் சிறப்பின் அறிகுறியாக முப்பது சான்றோரைப் பற்றிய இந்த நூலைச் சான்றோராகிய முதல் இந்தியக் குடிமகனுக்கு அன்புப் படையலாக்கிப் பெருமையும் பெருமிதமும் அடைகின்றேன். இதனால் இந்த நூலும் தமிழகத்தில் பெருமையுடன் உலவும் என்பது என் திடமான நம்பிக்கை. என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு முப்பது பெரியார்களுடன் யான் கொண்ட தொடர்புகளை நினை விற்குக்கொணர்ந்து அவை இலக்கியமாவதற்குத் திருவருள் புரிந்த திருவேங்கடத்து ஆயனை வாழ்த்தி வணங்கு கின்றேன். இந்நூல் நன் முறையில் வெளிவருவதற்குத் துணையாக இருந்த திருவருளையும் சிந்திக்கின்றேன், பெருதற் கரிய பரம்பொருளைப் பேசற் கரிய ஒளிப்பிழம்பை மறுவின் மறைகள் புகழ் முதலை வானோர்க் கமுதுண்ட் டிய இறையை