பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii சான்றோருக்குக் கீதையும் திருக்குறளும் வழிகாட்டிகளாக அமைகின்றன. தவிர, இச்சான்றோருக்கு இலக்கியச் சுவையும் நிறைய உண்டு. சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை ஆழ்ந்து கற்று அநுபவிப்பதை இவர்தம் சொற்பொழிவிலும் அவ்வப்போது 'கலைமகள்' போன்ற பருவ இதழ்களில் வெளிவரும் இவர்தம் கட்டுரை களிலும் வீசும் மணத்தால் அறிந்து கொள்ளலாம். தவிர இத்தனைக்கும் மேலாக பண்புடையார் பட்டுண்டு உலகம் (குறள்) உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே' (தொல்காப்பியம்) என்ற ஆன்றோர் வாக்குகட்கு எடுத்துக் காட்டாகத்திகழ்பவர்.இத்தகையபெரியார்-சான்றோர்முப்பது சான்றோர்களைப் பற்றிய நிறமாலை (Spectrum) போன்ற இந்நூலுக்கு ஒர் அணிந்துரை வழங்கி ஆசி கூறியது இந்நூலின் பெரும் பேறு; அடியேனின் பேறு மாகும். அணிந்துரை வழங்கிய அண்ணலுக்கு அடியேனின் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது. இன்றைய குடியரசுத் தலைவர் திரு.R.வெங்கட்டராமன் நம் நாட்டு பாரத ரத்தினம் போன்றவர். இவர் காங்கிரசு தொழிலாளர் இயக்கத் தலைவராக இருந்த போது என் அருமை நண்பர் திரு. R. கிருஷ்ணசாமி ரெட்டியாரும் (உரிமையாளர், சிதம்பா விலாஸ் பஸ் சர்வீஸ், துறையூர்) நானும் இவரை (1949-50) ஆண்டு பல தடவைகளில் காங்கிரசு அலுவலகத்தில் நரசிங்கம் பேட்டை தெரு, சென்னை-2) பார்த்து உரையாடிய துண்டு. அதன்பிறகு நான் காரைக்குடியில் பணியேற்ற தாலும் (1950-60), அடுத்து திருப்பதியில் பணியேற்ற தாலும் (1960-77) இவரைப் பார்க்கும் பேறு பெற வில்லை. ஆயினும் இவர் காமராசர் அமைச்சரவையில் தொழில் அமைச்சராகச் சேர்ந்து தமிழகம் ஒரு குரலாகப் புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு உயர்ந்ததையும், பின்னர்