பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi அடங்கியிராமல் பட்டி தொட்டியெல்லாம் பாங்குடன் உற்சவராக அலைந்து திரிந்து பிரச்சினைகளை நேரில் கண்டு தீர்த்து வைத்ததைத் தமிழகம் மறக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் உள்ளத்தில் நிலையாக வாழ் கின்றார். அங்ங்னமே தமிழக அரசுத்திட்ட ஆணையத்தின் s. JjJl %W TT& (Member, State Planning Commision) நின்று சுறுசுறுப்பாக இயங்கிப் பணியாற்றுவதை அரசு முதல் அறிஞர் வரை அனைவர் பாராட்டுதலுக்கும் உரியவராகின்றார். விரைந்து செயலாற்றும் வேந்தாகிய இவர் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகஅமைந்தது தெய்வ சங்கற்பமாகும். பாழாய்க் கிடந்த காண்டவ வனத்தை மயன் உதவியால் இந்திரப் பிரத்தமாக மாற்றியதை மாபாரதத்தில் படித்துள்ளோம்! அங்ங்னமே மயன், விசுவகர்மா இவர்களின் அம்சம் கொண்ட இப்பெரியார் புதுவையில் பாழாய்க் கிடந்த பெரு நிலப்பரப்பை இந்திரப் பிரத்தம் போல் மாற்றியமைத்து எழில் கொழிக்கும் கல்வி அரண்மனையாக-கலைமகளின் திருக் கோயிலாக-அமைத்து வருவதை நாடு முழுதும் கண்டு மூக்கில் விரலை வைக்கின்றது. நானிலமெங்கும் தேடி நல்லாசிரியர்களை நி ய மி த் த ல், நல்லறிஞர்களைக் கொண்டு சிறந்த முறையில் நடைமுறைக்கேற்ற பாடத் திட்டங்களை வகுக்கச் செய்து அவற்றைச் செயற் படுத்தல், பல செல்வர்களை அணுகிப் பல்வேறு அறக் கட்டளைகளை நிறுவுதல் போன்ற ஆக்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதை அறிஞர்கள் அனைவரும் ஒருமுகமாகப் பாராட்டுகின்றனர். அறிவு அற்றங் காக்கும் கருவி என்பதைப் பல்கலைக் கழகத்தின் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு எதிர்காலக் குடி மக்களாகத் திகழும் மாணாக்கர்களின் அறிவை மலரச் செய்வதில் அரும்பாடுபட்டுப் பணியாற்றுபவர். இத்தகைய