பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X இந்த நூல் சிறகு பெற்று வெளிவராமல் ஒரு நிறுவனத் தில் ஒராண்டுக் காலம் கூண்டுப் புழுவாகக் கிடந்தது. இந்நிலையில் இது தேன் மழைப் பதிப்பகம் என்ற நிறுவனத்தை அடைந்தது. அதன் உரிமையாளர் என் அருமைத் தம்பி திரு. வெள்ளையப்பன் கூண்டுப் புழுப் பருவத்திலிருந்த நூலை இறகு முளைத்த நிலையில் வெளிக் கொணர்ந்துள்ளார். இவருக்கு என் உளம் கனிந்த நன்றி. இறகுகள் முளைத்தபிறகு அதைப் பறக்க விடுவதற்குத் துணை செய்த திரு. சி சரவணக்குமார் அவர்கட்கு உரிமையாளர், கோமதி அச்சகம், 41, சூரப்ப முதலித் தெரு, திருவல்லிக்கேணி. சென்னை600005)என் நன்றியைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றேன். எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக்கட்டை தயாரித்து வண்ணங்களில் அச்சிட்டு லாமினேஷன் போடும் வரை பொறுப்பேற்று உதவிய ஒவிய மன்னர் P. N. ஆனந்தனுக்கும் இவ்வளவும் ஆன நிலையில் அழகிய முறையில் கட்டமைத்துக் கற்போர் கையில் கவினுறத்தவழச்செய்த திரு V. திருநாவுக்கரசுக்கும். என் இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இந்த நூலுக்கு அணிந்துரை அருளிய டாக்டர் K. வேங்கட சுப்பிரமணியன் அவர்களை நான் திருப்பதியில் ஒய்வு பெற்றுச் சென்னை வந்த நாள்முதல் (1978) நெருங்கிப் பழகி வருபவன். பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரையில் எழும் எல்லாவிதப் பிரச்சினைகளையும் கண்டு சமாளித்து வந்தவர், வருபவர். உயர்நிலைப் பள்ளிக் கல்வி இயக்குநராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்த காலத்தில் தாமரைச் செல்வர் தெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் அமைத்த தடத்தில் ஏகாந்தமான தந்தமாளிகையில் (lwory tower) மூலவராக