பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix வந்து வாழும் மக்களில் பலர் இதனைப் படித்ததுபவிக்கப் போகின்றனர். இந்த நூலில் முப்பது பெரியார்களுடன் அடியேன் பழகியதால் ஏற்பட்ட நினைவுகள் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இவர்களுள் கல்வியாளர்கள் எழுவர்; இவர்களுள்ளும் நால்வர் பல்கலைக்கழகந் துணை வேந்தர் கள்; இருவர் கல்லூரி முதல்வர்கள்; ஒருவர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர். ஏனையவர்களுள் புலமை நலஞ்சான்ற பெரியோர்கள் பதின்மர்; இலக்கியத் தொண்டர்கள் ஐவர், துறவிகள் இருவர்; சீர்திருத்தச் செம்மல்கள் இருவர்; அரசியல் தொடர்புடையோர் இருவர்; வள்ளல் ஒருவர்; கவிஞர் ஒருவர். இப்படிப் பிரித்துக் காட்டப்பெற்றாலும் எல்லோரிடமும் எல்லாக் கூறுகளும் பல்வேறு அளவுகளில் அடங்கிக் சிடக்கின்றன. இவர்கள் யாவரும் தம் புகழ் நிறீயித் தாம்மாய்ந்த பெரியோர்கள்; சான்றோர்கள். இவர்களிடம் தொடர்பு ஏற்படச் செய்த திருவருளைச் சிந்தித்துப் போற்று கின்றேன். இவர்கள் யாவரும் சித்தாந்த மொழியில் கூறினால் அடியேனுக்கு அணைந்தோராகக் காணப்படு கின்றனர்; பசுவின் (ஆன்மாவின்) அறிவு அஃது அடையும் பொருளின் தன்மையாக மாறிவிடும் பண்பையுடையது என்ற உண்மையைச் சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று சித்தாந்தம் பேசும். நிலத்தியில்பால் நீர் திரித்ததற் றாகும் (குறள் 452) என்ற வள்ளுவர் பெருமான் கூறும் பொன்மொழியின் உண்மையை யொத்தது இது. இன்று என்னிடம் காணப்பெறும் நல்லியல்புகள் யாவும் இப் பெரியார்களைச் சார்ந்தமையால் ஏற்பட்டவையே என்பது அடியேனின் கருத்து. இந்தத் தொடர்பினை ஏற்படுத்தி வைத்த திருவருளைச் சிந்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன்.