பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii யவை) எங்கும் ஒரே திரவியமாகப் பரவி நிற்கும் கால தத்துவமே காரணமாக அமைகின்றது. இதனையே சாதாரண மக்கள் காலத்தின் கோலம்’ என்று வழங்கு கின்றனர். தத்துவ விசாரத்துக்கு உட்படுத்திப் பேசு வதற்குச் சிரமமாக இருக்கும் இக் கருத்து சாதாரண மக்களின் திருவாயில் இலேசாகப் பிறந்து விடுகின்றது. காலத்தின் கோலமாகப்" பரிணமித்ததற்கு அடையாறு ஆலமரத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ள லாம். ஏறக்குறைய 200 ஆண்டுகட்கு முன்புள்ள ஒரு காலத்தில் அது சிறு பழத் தொரு விதையில் ஒளிந்து கொண்டிருந்தது. காலச்சக்கரம்-பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் கூறும் காலத்திகிரி -சுழன்று விதையில் ஒளிந்து கொண்டிருந்த ஆலமரத்தை மெல்ல மெல்ல இழுத்து வெளிக் கொணர்ந்துள்ளது. இங்ங்ணம் இந்த உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவுமே காலச் சக்கரத்தின் சுழற்சியால் வெளி வந்தனவாம் என்பது வெள்ளிடை மலை. ஒரு காலத்தில் கரு-உயிரணுவாக (Germ.cell) இருந்த அடியேன் காலச் சக்கரத்தின் சுழற்றியால் வளர்ந்து வளர்ந்து கல்வி கற்று, பல்வேறு நிலைகளில் பணியாற்றி, ஒய்வு பெற்று, ஒய்வு பெற்ற நிலையிலும் ஆய்வுப் பணியில் மூழ்கியுள்ளேன். இங்ங்னமே அடியே னுக்கு முன்பே தோன்றி வளர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்ட பல பெரியார்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு களும் கிடைத்தன. இந்த நீண்ட காலவெள்ளத்தில் அவ்வப்போது முகிழ்த்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அடியேனை உட்பகுத்திக் கொள்ளவும் நேர்ந்தது. இந்த அநுபவங் களைத் தான் மெய்ப்பொருளியல் நுகர்வினை (பிராரத்த கன்மம்) என்று பேசுகின்றது. காலத்தின் கோலத்தால் தான் இந்த நூலும் தோன்றி கால வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கப் போகின்றது. கருவூரிலிருந்து உறையூருக்கு