பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி ! மனத்தில் சலனம் இல்லாமல், மதியில் இருளே தோன்றாமல், கினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடt செயல்வேண்டும், கனக்கும் செல்வம், நூறு வயது; இவையும் தரநீ கடவாயே..." -பாரதியார் இந்த உலகில் கணந்தோறும் எத்தனையோ நிகழ்ச்சி கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவற்றில் சிக்கும் மனிதர்களின் மனநிலைக்கேற்ப இவை நல்லன தீயன' என்ற பெயர்களைப் பெறுகின்றன. இவற்றைக் கண்ணுறும் மனிதன் காலத்தின் கோலம்’ என்று திறனாய்வு செய்கின்றான். இந்தக் காலத்தைத்தான் ைவணவப் பெருமக்கள் காலதத்துவம்’ என்று பெயரிட்டு வழங்குகின்றனர். கவிஞர்கள், சிந்தனையாளர்கள் இத் தத்துவத்தைக் காலச் சக்கரம்' , ' கால வெள்ளம் என் றெல்லாம் உருவகப்படுத்திப் பேசும் மரபும் எழுந்துள்ளது. அசித்தின் ஒரு பகுதியாகிய மிச்ரதத்துவம் பல்வேறு விதமாக விகாரப்படுவதற்கு (வளர்ச்சி, தேய்வு முதலி 2. விநாயகர் நான்மணிமாலை-7