பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*yi வாழ்வில் ஏற்பட்ட பிணைப்புகளை மலரும் நினைவு களாகப் பின்னிப் பிணைந்துள்ளார்கள், தன்-வரலாற்றைத் தருக்க ரீதியாக வழங்காமல், "மலரும் நினைவுகளாகப் படைத்துள்ளார் பேராசிரியர் ரெட்டியார். இவர்தம் நினைவுகளில் பெருந் தவத்திரு சித்பவாநந்த அடிகள் உண்டு; மறைத் திரு எஸ். ஜெரோம் 'டி. செளசா உண்டு; சீர்திருத்தச் செயல் வீரர் தந்தை பெரியாரும் உண்டு; பாவேந்தர், வள்ளல், கலெக்டர், கவிராச பண்டிதர், பேராசிரியர்கள், தலைமையாசிரியர், தமிழ்க்கடல், இரசிகமணி, கம்பன் அடிப்பொடி, பிரதி வாதி பயங்கரம், சபாநாயகர், உரைவேந்தர் எனப் பல நிலையினரும் மனம் களிக்கத் தோன்றுகின்றனர். நெறிப்படுத்தும் சமயம், நெஞ்சையள்ளும் தமிழ், நேர்மை விளக்கும் தத்துவம், மனநலம் உணர்த்தும் உளவியல் எனப் பல வண்ண மலர்கள் இத்துணரில் மலர்ந் துள்ளன. வெறும் வரலாற்றுப் படைப்பாக இராமல் இலக்கிய மேற்கோளுடன் இதனை, இனிய காவியமாக்கி யுள்ளார் திரு ரெட்டியார். 'துர்தர்ஷன் (Telescope) என வழங்கியதைத் "தொலைக்காட்சி எனத் தமிழ்ப்படுத்திய இவர் வழங்கும் "மலரும் நினைவுகள் தொலைக்காட்சியில் நிகழும் "தடங்கலுக்கு வருந்துகின்றோம்’ என்பது ஏதுமின்றித் தொடர்ந்து கண்டு களிக்கும் வண்ணம் உள்ளது. தமிழ்ச் சான்றோர்களின் வரலாற்று ஆராய்ச்சி செய் வோருக்கு இந்நூல் ஓரளவு துணையாக இருக்கும். பிற நூல்களில் வெளிவராத பல அரிய நிகழ்ச்சிகளைக் கொண்டு மணக்கும் இந்நூல் தமிழ்கூறு நல்லுலகெங்கும் பெரிதும் வரவேற்கப்படும் என்பது திண்ணம். புதுச்சேரி, (ஒ-ம்) கி. வேங்கடசுப்பிரமணியன் 21, நவம்பர் 1989