பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (டாக்டர் கி. வேங்கடசுப்பிரமணியன், துணைவேந்தர், புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி) ஓங்கு புகழ் வேங்கடவன் பல்கலைக் கழகத்திலிருந்து பாங்குறப் பைந்தமிழ்ப் பணியாற்றி, ஒய்வு பெற்றும் தோய்வுறாமல் தொல்லிசைத் தமிழ்த் தொண்டாற்றும் எனதருமை நண்பர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் "மலரும் நினைவுகள் முப்பது மலர்கள் அடங்கிய ஒர் அரிய பூந்துணர்க் கொத்து. இளமையில் நிச்சநிரப்பினுள் நின்றபோதும், நிலை குலையாது துச்சமென்த் துயரைத் துரக்கி எறிந்து, முயற்சி திருவினையாக்கும்’ என்னும் வள்ளுவன் வாக் கிற்கு இலக்கியமாய், இலக்கணமாய்த் திகழ்பவர் டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். வைணவத் தமிழ்க்கோ' வாகத் திகழும் பேராசிரியர் ரெட்டியார் வாழ்நாள் முழுவதையும் தமிழ்த் தொண்டிற் காகவே அர்ப்பணித்துக் கொண்டவர். துள்ளித் திரிந்த பள்ளிப் பருவத்திலிருந்தே நமக்குத் தமிழார்வத்தை ஊட்டி வளர்த்த தமிழ்ச் சான்றோர்கள், கல்விநலம் காத்த பெரியார்கள் (துணைவேந்தர்கள்), பணிமேற் கொண்டு தணியாத ஆர்வமுடன் தமிழ்த் தொண்டாற்றிய காலைத் தொடர்பு கொண்ட மூதறிஞர்கள் ஆகியோருடன் தம்