பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. ஏ. கே. செட்டியார் 盟盛岛 தெல்லாம் வேகமாக ஒடிச் செட்டியாரவர்களை இடை மறித்துக் கடைக்கு இட்டு வருவேன். இவரை என் சம்பந்தி M. R. துரைசாமி ரெட்டியாருக்கு அறிமுகப் படுத்திவைப்பேன். காஃபி பருகிக்கொண்டே நாங்கள் செட்டியாருடன் உரையாடி மகிழ்வோம். மாவ்பரீஸ் சாலையிலிருந்த குமரி மலர் அலுவலகம் லஸ்சர்ச் சாலைக்கு மாற்றப்பட்ட பிறகு ஒரு நாள் திரு. கோபாலன் அவர்களைப் பார்க்கச் சென்றேன். அண்மை யில் செட்டியாரவர்கள் மறைந்த சமயம் அது. செட்டி யாரவர்கள் மறைந்தபோது நான் திருப்பதியில் இருந் தேன். திருப்பதியிலிருந்து திரும்பிய பிறகு கேதம் விசாரிப்பதற்காகவே கோபாலன் அவர்களைப் பார்க்கச் சென்றேன். சிறகொடிந்த பறவை போல் காணப்பட்டார் அவர். ஆறுதல் கூறி நான் எழுதிய ஒன்றிரண்டு நூல்களை அவருக்கு அளித்து விட்டுத் திரும்பினேன். குமரிமலர் உரிமையையும் பிறவற்றையும் செட்டியாரவர்கள் திரு கோபாவனின் பேருக்கு எழுதி வைத்ததையும் அறிந்து கொண்டேன். இதன் பிறகு இவர் மறைந்த செய்தி தான் என் காதுக்கு எட்டியது. எவரையும் அறியாததால் இந்தக் கேதம் விசாரிக்கச் செல்லவில்லை. இருவர் மறைவும், நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு என்றகுறளை (குறள்-335) நினைவூட்டுவதாக இருந்து வருகின்றது. கவிஞன் உள்ளம் : நான் துறையூரில் தமிழன்னையின் மடியிலிருந்துகொண்டு தமிழமுதம் பருகிய அநுபவத்தை இருபத்தைந்து இலக்கியக் கட்டுரைகளை எழுதி வைத் திருந்தேன். இவற்றில் பத்துக்கட்டுரைகள் திரு. பெ. துாரனை ஆசிரியராகக் கொண்டு கோவையிலிருந்து வெளி வந்த காலச் சக்கரம்’ என்ற இதழில் அச்சு வடிவம் பெற்றன. இவற்றையும் வெளிவராதவற்றையும்