பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷颜莎 மலரும் நினைவுகள் தொகுத்துக் கவிஞன் உள்ளம் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். இதுதான் என் கன்னி முயற்சியாக வெளிவந்த முதல் நூல் (அப்போது என்வயது 32). இதற்கு ஒரு பெரியாரிடம் அணிந்துரை பெறுவதற்காகச் சென்னை வந்தேன். சென்னையில் தக்கார் ஒருவரை அறியாதவனாதலால் குமரிமலர் அலுவலகம் (100, மாவ்பரீஸ் சாலை) சென்றேன். திரு. கோபாலன் அவர்கள் அருகில் சீனிவாச அய்யங்கார் சாலையில் ஒரில் லத்தில் தங்கியிருந்த திரு பி. பூர். அவர்களிடம் என்னை இட்டுச் சென்று அறிமுகப்படுத்தி வைத்து அணிந்துரை பெறச் செய்தார்கள். அந்தக் காட்சி இன்றளவும் என் உள்ளத்தில் பசுமையாகவே உள்ளது. இது நடை பெற்றது 1949-சனவரியில், இதன்பிறகு துறையூர் தலைமையாசிரியர் பதவியைத் துறந்து 1959-ஜூலை முதல் காரைக்குடியில் புதிதாகத் தொடங்கப் பெற்ற அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேராசிரியனாகப் பொறுப்பேற்றுப் பணியில் அமர்ந் தேன். குமரிமலரில் என் கட்டுரைகள் : காரைக்குடிக் கல்லூரி வாழ்வில் ஒய்வும் நூலக வசதிகளும் நன்றாக அமைந்தன. ஏராளமான நூல்களைப் படிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள் பற்றியும், மொழிவரலாறு பற்றியும் பல கட்டுரைகள் எழுதினேன். இவை யாவும் குமரிமலரில் தொடர்ந்து வெளிவந்தன. பல பெரியோர்களின் கட்டுரைகளுடன் சிறியேனின் கட்டுரைகளும் வெளிவந்தமைகுறித்து எனக்கு மனப்பூரிப்பே ஏற்பட்டது. எல்லாம் இறைவன் திருவருளே என்று அமைதியும் அடக்கமும் கொண்டேன். இதனால் செட்டியார், கோபாலன் இவர்களின் நட்பு ஆழமாக அமைய வாய்ப்புகள் ஏற்பட்டன. இதனால் எழுத்தாளர் உலகில் ஒருவனாகத் திகழ்ந்தேன். பல பெரியோர்களின் தொடர்பும் ஏற்படக் காரணமாகவும்