பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும்நினைவுகள் கடல்’ என்றும், வேதாசலம்’ என்ற தம் பெயரை மறை வலை’ என்றும் மாற்றி வைத்துக்கொண்ட மறைமலை யடிகளா ? என்பது என்னால் அறியக் கூடவில்லை. அடிகள்’ என்ற பின்னொட்டு அவர்கள் துறவுக் கோலம் கொண்ட பின்னர் பெயருடன் ஒட்டிக்கொண்டது. திராவிட இயக்கம் தோன்றிய பின்னர் நாராயணசாமி’ என்ற பெயர் நெடுஞ்செழியனாகவும் இராமசாமி என்ற பெயர், அன்பழகனாகவும், சோமசுந்தரம் என்ற பெயர் மதியழகனாகவும், மாறியனவாகக் கேட்டதுண்டு. திரு. உலக ஊழியனார் சேலம் மாவட்டம் கழக உயர் நிலைப்பள்ளிகளில் தலைமைத் தமிழாசிரியராகப் பணி யாற்றிப் பேரும் புகழும் பெற்ற பெருமகனார். நாமக்கல் கழக உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியபோதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். இவர் பேச்சுத் திறன் பற்றிப் பலர் என்னிடம் சொல்லியதனால் இவரை ஒரு முன் நி (1942 செப்டம்பர் என்பதாக நினைவு) துறையூர்ப் பள்ளி மாணவர் இலக்கிய மன்றத்தின் தொடக்க விழாவிற்கு அழைத்திருந்தேன். மிக அருமை. யாகப் பேசி மாணாக்கர்களின் கவனத்தை ஈர்த்தார். பேச்சின் எடுப்பும் கணிர் ஒசையும், பாடல்களை இசை யுடன் பாடி விளக்கின முறையும் கேட்போரின் செவிக்கு இனியனவாய், சிந்தைக்கு நல்விருந்தாய் அமைந்திருந்தன. அன்றிருந்து அவர் என் இனிய நண்பரானார்; குடும்ப நண்பருமானார். குருகுலவாசம்போல் நாட்டாரிடம் பயின்றவராதலால் ஆசிரியரிடம் அமைந்திருக்க வேண்டிய நற்குணங்கள் யாவும் இவரிடம் என்னால் காண முடிந்தன. ஈதல் இயல்பே இயம்பும் காலைக் காலமும் இடமும் வாலிதின் நோக்கிச் 1 . . வேதாசலம்’ என்பது திருக்கழுக்குன்றம். வேதமே மலையாதலின் இது சைவ சமய குரவர் நால்வர் பாடல்களும் பெற்ற திருத்தலம்.