பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர. உலக ஊழியனார் 五 55。 சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக் கோட்டமில் மனத்தின் நூல்கொடுத்தல் என்ப." என்று நன்னூலார் கூறும் இலக்கணத்திற்கு இலக்கிய மாகத் திகழ்ந்ததை என்னால் அறுதியிட முடிந்தது. தேவை ஏற்படும் போதெல்லாம் இவருக்குப் பள்ளியிலும் ஊர்ப்பொது மன்றங்களிலும் வாய்ப்புகள் நல்கினேன். எப்பொழுது வந்தாலும் என் விருந்தினர்தான். அப் பொழுது நானும் என் மனைவியும்தான் குடும்பம்: குழந்தைப் பேறு இல்லை. என் அன்னையார் துறையூருக்கு ஏழு கல் தொலைவிலுள்ள கோட்டாத்துார் என்ற என் சொந்த ஊரில் வேளாண்மைத் தொழிலைக் கவனித்து வந்தார்கள். தமிழில் நல்ல புலமை ஏற்பட வேண்டுமானால் நல்லாசிரியரிடம் மூன்று நான்கு நூல்களையாவது பாடம் கேட்க வேண்டும். என் வாழ்வில் புலமை எய்துவதை முதல் நோக்கமாகவும் தேர்வு எழுதிப் பட்டங்கள் பெறுவதை இரண்டாவது நோக்கமாகவும் கொண்டிருந்தேன். 1943 முதல் சென்னைப் பல்கலைக்கழகம் டத்தி வரும் வித்துவான் தேர்வு எழுதுவதைக் குறிக்கோளாகக் கொண் டிருந்தேன். வித்துவான் இறுதி நிலைத் தேர்வுக்குப் 'பொருநராற்றுப் படை பாடமாக இருந்தது. ஒரு சிறப்புச் சொற்பொழிவை வெள்ளியன்று அமைத்தேன்; சனி ஞாயிறு என் இல்லத்தில் தங்கி பொருநராற்றுப்படை பாடம் சொல்லவேண்டும் என்று திரு. ஊழியனாருக்கு எழுதி வேண்டுகோள் விடுத்திருந்தேன். அவரும் இப் பணியை அன்புடன் ஏற்றுக்கொண்டு மறுமொழி தந்திருந் 空frT・ 2. நன்னூல்-பொதுப்பாயிரம். 36