பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

諏あ紛 மலரும் நினைவுகள் பத்துப்பாட்டு’ என்னிடம் ஒருபடி தான் உள்ளது: இன்னொரு படி இருந்தால் வசதியாகப் பாடஞ் சொல்ல வாய்ப்பாக இருக்கும்’ ’ என்று கூறினேன். அது பற்றிக் கவலை வேண்டா. நான் நாட்டார் அய்யாவிடம் பாடம் கேட்டவன். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை -இவை உரையுடன் மனப்பாடமாக-எனக்குத் தெரியும். ஒரு படியே போதும்; அதை நீங்கள் வைத்துக்கொள்ள லாம் என்றார். இரண்டு நாட்களில் காலையும் மாலையு மாக பொருநராற்றுப் படையை அற்புதமாகக் கற்பித்து விட்டார். சொல்லுந்தோறும் நச்சினார்க்கினியரின் உரை நயத்தையும், அவர் சிறப்பாகக் கையாளும் மாட்டேறு' என்ற உத்தியையும் அற்புதமாக விளக்கியது இன்றும் (அக்டோபர்-1989) என் மனத்தில் பசுமையாக உள்ளது. சிவப்பதிகாரம்-மதுரைக் காண்டமும் தேர்வுக்குப் பாடமாக இருந்தது. அதனை முழுதும் கேட்க வாய்ப் பில்லை. நான்கு காதைகளை மட்டிலும் பாடம் கேட் டேன். அடைக்கலக் காதை" , கொலைகளக் காதை" ஆய்ச்சியர் குரவை வழக்குரை காதை -ஆகிய நான்கை யும் பாடங் கேட்கும் பேறு ஏற்பட்டது. நான்கு முறை துறையூரில் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டு வாய்ப்புகள் ஏற்படுத்தி இவற்றைக் கேட்டேன். தேர்வுகளை முதன்மை நோக்கமாகக்கொண்டு மேம் புல் மேய்ந்தால் புலமை ஏற்படாது. வாயிலோயே, வாயிலோயே என்ற தொடரை (வழக்குரை காதைஅடி 24) என்ற தொடரை வாய் இல்லோயே, வாய் இல்லோயே என்று சிறிது மாற்றிக்கொண்டால் இப் போது தென்னாட்டில் கூர்க்கர்கள் செல்வர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் காவலர்களாக இருந்து வருவதுபோல் அக்காலத்தில் பாண்டிநாட்டுடன் கிரேக்க நாட்டு தொடர்பு இருந்து வந்ததால் கிரேக்கர்கள் (யவனர்கள்) அரண்மனையில் வாயில் காவலர்களாக இருந்து வந்ததை ஊகிக்கலாம் என்றார். (வாய் இல்லோயே என்பதற்கு