பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர. உலக ஊழியனார் 麓57。 (தமிழ்ப் பேசத் தெரியாதவனே) என்று பொருள்கொள்ள வேண்டும் என்றார். இஃது அவரது சிந்தனைத் திறனைக் காட்டுகின்றது . பருகுவன் அன்ன ஆர்வத்த னாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்’ பாடம் கேட்டதை நினைவுகூர்கின்றேன். கீதையைக் கண்ணன் உபதேசித்ததைப் பார்த்தன் ஆர்வமாகக் கேட் டான்; பரந்தாமனும் மிக்க ஆர்வமுடன் உபதேசித்தான், ஆசிரியன்-மாணாக்கன் உறவு பார்த்தன்-பரந்தாமன் உறவுபோல் அமைதல் வேண்டும் என்பது கற்பித்தல் துறையில் ஒரு குறிக்கோள் நிலை. இந்த நிலையைத் தான் நான் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி யில் பேராசிரியனாகப் பணிபுரிந்தபோது (1950 - 1960) பயிற்சி பெறும் ஆசிரியர்கட்கு அடிக்க்டி வற்புறுத்திக் கூறுவேன் . திரு ஊழியனார் சிலம்பம் ஆடுவதிலும், ஆசனங்கள் செய்வதிலும் சித்த மருத்துவத்திலும் நல்ல பயிற்சி பெற்றிருந்தார். வாலிபப் பருவத்தில் இல்லறத்தில் இருக்கும்போது பவள பஸ்பம்’ சாப்பிடுவது நல்லது என்று அடிக்கடிச்சொல்வார்; இதைநெய்யிலோ, தேனிலோ குழைத்துச் சாப்பிடவேண்டும் என்று அறிவுரையும் கூறுவார். நான் இதைச் சாப்பிட ஆர்வம் கொண்டேன். தானே இதைச் செய்து தருவதற்கும் முன் வந்தார். ஒரு புது மண் மொந்தை வாங்கப்பட்டது. 30 பலம் பவளமும், ஒரு போத்தல் (அரைப்படி) தேனும் வாங்குமாறு பணித்தார். பதினைந்து எலுமிச்சைப் பழத்தின் சாறு தயாரித்துக்கொண்டு அச்சாற்றில் பவளத்தை ஒரிரவு முழுவதும் ஊற வைத்தார். மறுநாள் காலையில் பவளத் திலிருந்த அழுக்கெல்லாம் நீங்கி இருந்தது. அதை மீண்டும் மீண்டும் நன்னீர் விட்டு நன்றாகக் கழுவினார்; பவளத்தை 3. நன்னூல்-பொதுப்பாயிரம்-40