பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மலரும் நினைவுகள் நன்கு உலர்த்தினார். மண் ம்ொந்தையை நன்றாகக் கழுவி அதில் இந்தப் பவளத்தைப் போட்டு அது நன்றாக முழுகும் வரையிலும் தேனை ஊற்றினார். பிறகு ஒரு மண் மூடி யால் மொந்தையை நன்றாக மூடி மெல்லிய கம்பியைக் கொண்டு மொந்தையினின்று மூடி நழுவாதவாறு வலு வாகப்பிணித்தார். பள்ளியிலேயே என் வீடு, வீட்டிற்குப்பின் புறம் பள்ளமும் படுகுழியும் நிறைந்த பாறைத் தரை. ஒரு குழியில் இரண்டு வரிசை சாணத்தாலான விராட்டியைப் பரப்பினார். அதன் மீது மொந்தையை வைத்து மொந்தையைச் சுற்றிலும் மேற்புறமும் விராட்டிகளை இரண்டு மூன்று வரிசைகளாக அடுக்கி மொந்தையை நன்கு மூடினார். மேற்புறத்தில் ஒரு பெரிய தகரத்தை வைத்து அதன்மீது தகரம் நகராதவாறு நாலைந்து கற்களை வைத்தார். பின்னர் தீ மூட்டினார். ஓரிரவு முழுவதும் தனல் கனிந்த நிலையிலிருக்க வேண்டும் என்றார். போது மான அளவு விராட்டி அமையாவிட்டால் பவளம் பஸ்ம மாகாது என்று மிக்க விழிப்புடன் அதிகமாக விராட்டி களைப் பயன்படுத்தி இருந்தார். மறுநாள் காலையில் விராட்டி சாம்பல் மயமாகி இருந்தது; வெப்பமும் தணிந்திருந்தது. மொந்தையை மேற்புறம் நன்கு துடைத்து. கம்பிக் கட்டை அகற்றி மூடியை நீக்கிப் பார்க்கும் போது தேன் காகிதம் எரிந்த சாம்பல்போல் இருந்தது. மொந்தையிலுள்ள வற்றை ஒரு தாம்பாளத்தில் கொட்டி வாயினால் ஊதியே சாம்பலை அகற்றினார். பவளம் நன்றாகப் பஸ் மம் ஆகி யிருந்தது என்று மேலோட்டமான பார்வையிலேயே கணித்து விட்டார். பின்னர் பஸ் மமாகி இருந்த பவளத்தை மேலும் தூய்மையாக்கினார். அவர் சொற்படி திரு. சீநிவாசராவ் என்ற ஆயுர்வேத மருத்துவரிடமிருந்து கல்வம் ஒன்றைக் குழவியுடன் இரவலாக வாங்கி வைத் திருந்தேன். பொரிந்திருந்த பவளத்தைச் சிறிது சிறிதாகக் கல்வத்தில் போட்டு நன்றாகப் பொடி பண்ணினார். பிறகு