பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர. உலக ஊழியனார் I539 தூய்மையான துணியில் வடிகட்டினார் (வஸ்திர காயம் செய்தார் என்பது மருத்துவமொழி). துணியில் தங்கின வற்றை மீண்டும் கல்வத்தில் போட்டுப் பொடி பண்ணி னார்; வஸ்திரகாயம் செய்தார். இந்த நுண்ணிய நிலை யிலுள்ள பொடியே பவளபஸ்பம்’ என்பது. பிறகு இரண்டு கண்ணாடிப் போத்தல்களில் நிரப்பி இறுக்கமான தக்கை யைக் கொண்டு மூடி என் கையில் கொடுத்து விட்டார். இப்பொடியை தேனில் குழைத்து விட்டு விட்டு இரண்டு மண்டலம் (48-48 நாட்கள்) உண்டு நல்ல பயனைக் கண்டேன். இவர் சொற்பொழிவுகள் மாணவர் ஆசிரியர், இலக்கியத்தைச் சுவைக்கும் நாட்டமுள்ள ஊர்ப் பெரு மக்கள் இவர்கள் மனத்தைக் கொள்ளை கொண்டன. தான் துறையூரிலிருந்த ஒன்பதாண்டுக் காலத்தில் இவரைப் போன்ற பல்வேறு புலவர் பெருமக்களைத் துணை கொண்டு, சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்* என்ற பாரதியின் மொழியில் துறையூரைத் தமிழ் மணம் கமழச் செய்ய முடிந்தது. என் தோழ ஆசிரியர்களும் மாணவ மணிகளும் என்னுடைய தமிழ்ப் பணிக்கு உறுதுணையாக இருந்ததை இப்போது நினைவுகூரும் போது உள்ளம் குளிருகின்றது. துறையூரில் மேல்கோடியில் இச்சி மரத்தடியில் ஒரு நாள் மாலையில் நடைபெற்ற இலக்கியக் கூட்டம் நினை விற்கு வருகின்றது. பெருங்கூட்டம். வெள்ளம்போல் மக்கள் திரண்டிருந்தனர். கம்பனில் ஒரு பாடலும் அதே கருத்துடைய நளவெண்பாவிலுள்ள ஒரு பாடலும் ஊழியர் பேச்சில் தாண்டவமாடுகின்றன; அற்புதமாக 4. பா. க. தேசிய கீதங்கள்-தமிழ்.2