பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நங்கையே என்று இரவு கழிந்த நிகழ்ச்சியை அழிகள் காட்டுகின்றான் கம்பநாடன். இப்போது விடியற் காலையின் வருணனை வருகின்றது. கடையாமத்தில் கோழிகள் கூவுகின்றன என்று கூற வந்த கவிஞன் கற்பனையால் ஒரு காட்சியைச் சித்திரிக்கின்றான், மூன்றாம் யாமத்தில் கைகேயியின் அந்தப்புரத்தில் இரவில் நடந்த காட்சிகளையெல்லாம் கோழிகள் கண்ண ார்க் காண்கின்றன. ஒரு பெண்ணினால் மன்னன் மதிகெட்டுப் புலம்பியதையெல்லாம் காண்கின்றன. அந்தத் துயரத்தை ஆற்ற முடியாத கோழிகள் கடையாமத்தில் தமது இறகு களாகிய கைகளால் வயிற்றிலறைந்து கொண்டு அழுகின்றன என்று வருணிக்கின்றான் கவிஞன். இவ்வாறு விளக்கிய ஊழியனார், எண்ட ருங்கடை சென்ற யாமம் இயம்பு கின்றன. ஏழையால் வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மிய வாறெலாம் கண்டு நெஞ்சு கலங்கி அஞ்சிறை யான காமர் துணைக்கரம் கொண்டு தம்வயி(று) எற்றி எற்றி விளிப்பு போன்றன கோழியே." என்ற பாடலை இசையோடு படிக்கின்றார்; அவருக்கே என்று ஆண்டவன் வழங்கிய வெண்கலத் தொண்டையால் கணிர் கணிர் என்று பாடுகின்றார். கோழி கூவும்போது இறக்கைகளை அடித்துக் கொண்டுதான் கூவும் என்ற இயற்கை நிகழ்ச்சியை. காமர் துணைக்கரம் கொண்டு தம்வயி(று) எற்றிஎற்றி விளிப்ப போன்றன கோழியே 5. அயோ. கைகேயி சூழ்வினை. 47