பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மலரும் நினைவுகள் என்ற அடிகளால் காட்டும் உலக ஊழியர் தம் கைகளைத் தூக்கி மார்பிலும் வயிற்றிலும் பன்முறை அறைந்து அறைந்து காட்டிய நாடகப் பாணி இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. இவர் உரையைக் கேட்ட கூட்டத் தினர் கவிதை யநுபவத்தின் கொடு முடியை எட்டினதை நான் நேரில் கண்ட காட்சி இன்றும் என் மனத்தை விட்டு மறையவில்லை. இந்தக் காட்சியை முற்றிலும் ஒத்த மற்றொரு காட்சியை "நளவெண்பா'விலிருந்து காட்டும்போது கூட்டத்தினரின் கவிதையதுபவம் சிறகடித்துப் பறக்கத் தொடங்குகின்றது. கலியின் கொடுமையால் நளன் பட்ட துயரங்களையும் அல்லல்களையும் நாம் அறிவோம். கலிபுருடன் சூழ்ச்சியால் ஆடையை இழந்த நளன் தமயந்தியை இட்டுக் கொண்டு ஒரு பாழ் மண்டபத்திற்கு வருகின்றான். இருவரும் ஒராடையைப் பகிர்ந்து கொண்டு உறங்குகின்றனர். நள்ளிரவில் அவளது ஆடையைவாளால் அரிந்து கொண்டு அவளை விட்டுப் பிரிகின்றான் நளன். பிரிவதற்கு மனம் துணியவில்லை. சிறிது தூரம் போகின் றான்; திரும்பி வருகின்றான். இச் செயல் பலமுறை நடை பெறுகின்றது. இதனைக் கவிஞர் புகழேந்தி, போயொருகான் மீளும் புகுந்தொருகான் மீண்டேகும் ஆயர் கொணர்ந்த அடுபாலின்-தோயல் கடைவார்தம் கைபோலும் ஆயிற்றே காலன் வடிவாய வேலான் மனம்.? என்று காட்டுவர். ஆய மகளிர் தயிர் கடையும்போது அவர்கள் கைகளில் பற்றியிருக்கும் கயிற்றின் துணிகள் மத்தை நோக்கிப் போவதும் வருவதுமாக இருப்பதுபோல் 6. நளவெண்பா-274