பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置密尖 மலரும் நினைவுகள் யுடன் படித்துக் கொண்டே தம் கைகளால் வயிற்றி லறைந்து கொண்டு காட்டிய காட்சியால் மேடையின்மீது ஊழியர் வடிவில் ஒரு பெரிய கோழியே தனது இறக்கை களால் அடித்துக் கொள்வது போன்ற ஒருவித மயக்கத்தை உண்டாக்கி விடுவார். இந்தக் காட்சியும் இரண்டு காட்சி களை ஒப்பிட்டுக் காட்டிய திறமும் இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளன; ஊழியரே என் மனத்திலிருந்து தாண்டவமாடுவது போன்ற பிரமை (மயக்கம்) உண்டா கின்றது. காரைக்குடியில் கவிதை கற்பிக்கும் முறையை விளக்கும் போது இக்காட்சிகளை நினைவு கூர்ந்து விளக்கு வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 1948-ஆம் ஆண்டு வாக்கில் சொல்வன்மையும்: ஆழ்ந்த புலமையையுமுடைய இப்பெரும் புலவரை சேலம் நகராண்மைக் கல்லூரியிலிருந்த முதல்வர் இராமசாமிக் கவுண்டர் (தமிழ்ப் பற்றுமிக்க ஒரு கணிதப் பேராசிரியர், தம் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்திக் கொண்டார். துறையூரிலிருந்து ஒரு நீதி மன்ற வழக்கின் நிமித்தம் சேலம் சென்றிருந்தபொழுது இவரைச் சந்தித்தேன். என்னைக் கல்லூரிக்கு இட்டுச் சென்று முதல்வர் இராமசாமிக் கவுண்டர் அவர்கட்கும், ஆங்கிலப் பேராசிரியர் அச்சுத நாயருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். திரு. ஊழியனார் அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்ட ஆங்கிலப் பேராசிரியர்களும் இவர் மீது மோகம் கொண் டனர். சில சமயம் தம் சொற்சிலம்பத்தால் ஆங்கிலப் பேராசிரியர்களின் கவனத்தையும் ஈர்ப்பார். தமிழில் போர் என்றால் ஆங்கிலத்தில் நீங்கள் War என்பீர்கள். நீங்கள் ஆங்கிலத்தில் Poய என்று சொல்லும்போது நாங்கள் வார்’ என்போம்' என்பதை இப்போது நினைவு கூர முடிகின்றது. தமிழில் உள்ள சீழ்ப் பிடித்தல்' என்ற தொடர் 'சீப்பிடித்தல்' என்று மருவி