பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர. உலக ஊழியனார் - 互鑫5 'சீப்பிடி’ என்ற வடிவங் கொள்ளும் போது ஆங்கில மொழி யில் Septic என்ற சொல்லாக மாறி விட்டது' என்று சொல்லி அனைவரையும் நகைக்கச் செய்வார். 1950 - சூலை 5ந்தேதி முதல் நான் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணி ஏற்றுக் கொண்டேன். அங்குச் சென்ற பிறகும் இவர் தொடர்பு அறவில்லை. திருமணம் ஆகிப் பதின்மூன்று ஆண்டுகட்குப் பின்னர் துறையூரில் (அக்டோபர் 13, 1949) பிறந்த என் மகன் இராமலிங்கத்திற்கு 1954-இல் ஐந்தாண்டு (அக்டோபர்) முடியும் நிலை. ஒழுக்கமுடையவராயும் பெரும் புலமையுடையவராயும் இறைவழிபாடு செய்பவரா யுமுள்ள ஒரு பேராசானைக் கொண்டு கல்வி தொடங்கி வைக்கவேண்டும் என்பது என்ஆர்வம். திரு.ஊழியனாரைத் தேர்ந்தெடுத்தேன். அவருக்கு எழுதிக் கேட்டேன்; ஒப்புக் கொண்டார். கல்வி தொடங்க நாள் குறிப்பிடப் பெற்றது. திரு.ஊழியனார் வருங்கால் 8 முழ வெண்பட்டு, ஒர் பட்டு மேலாடை (அங்கவஸ்திரம்) வாங்கி வருமாறு எழுதினேன். அவ்வாறே வாங்கி வந்தார். சேலம் பட்டாடைக்குப் பெயர் போனதல்லவா? கல்வி தொடங்கும்போது சடங்கு களைத் தவிர்த்தேன். கலைமகள் படத்திற்கு முன்னதாகச் சிறுவனைப் புத்தாடை அணியச் செய்து 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு என்ற குறளை பதம் பதமாக மூன்று முறை சொல்லச் செய்தார். கலைமகளை வணங்கச் செய்தார்; கல்வித் தொடக்கம் இவ்வளவோடு முடிந்தது. திரு. ஊழியனாருக்குக் காணிக் கையாக வெண் பட்டாடைகள், ரூ.50| = தட்டில் வைத்துத் தந்து சிறுவனை வணங்கச் செய்தேன். மதியத்தில் ஒரு சிறு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். என் கல்லூரித் தோழ ஆசிரியர்கள், முதல்வர் திரு. எஸ். சீநிவாசன், மாதிரி உயர்நிலைப் பள்ளி ஒவிய ஆசிரியர் திரு வி. முனியாண்டி, (உலக ஊழியரால் பரிந்துரைக்கப்பெற்று, என்மூலம் சா.க.அவர்களைச் சந்திக்கச் செய்து நியமனம்