பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர. உலக ஊழியன்ார் 167 என்ற தொடர் (திருவாய் 6.7:1)நினைவிற்கு வருகின்றது. இதுவே அவர் நுகர்ந்த போக்கியம்’ ஆகும். எளிய முறை யில் சிக்கனமாக வாழ்ந்த குடும்பம், அளவறிந்து வாழ்ந்தமையால்-ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தமையால்-பணத்தட்டுப்பாடு இன்றி வாழ்ந்து வந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். சவரன்களை ஏறின விலைக்கு விற்று ஒரு சில ஏக்கர்கள் நஞ்சை நிலத்தைத் தஞ்சை மாவட்டத்தில் வாங்கியிருந்ததாகவும் அறிந் தேன். 1958-இல் திரு. தி. மூ. நாராயணசாமி பிள்ளை அவர் கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்த ராக இருந்த சமயம். அப்பொழுது மூன்று அறிவியல் நூல் களை வெளியிட்டுப் புகழ் பெற்றிருந்தேன். இவற்றுள் மானிட உடல் (பட்டப் படிப்புக்கு ஏற்றது) அணுக் கருபெளதிகம் (பட்டப் படிப்பிறகு இதுவும் ஏற்றது) என்ற இரண்டும் மொழி பெயர்ப்பு நூல்கள். இவற்றுள் பின்னது சென்னைப் பல்கலைக் கழகப் பரிசு பெற்றது. "அணுவின் ஆக்கம்’ என்பது சொந்தப் படைப்பு. இவை தவிர, தமிழ் பயிற்றும் முறை, அறிவியல் பயிற்றும் முறை என்ற இரண்டு நூல்களையும் (பயிற்சி கல்லூரிக்கு ஏற்றவை) வெளியிட்டிருந்தேன். இவை இரண்டும் என் சொந்தப் படைப்புகள். இவற்றாலும் எனக்குப் புகழ் வந்தது. காரணம், இவை முதன் முதலாக் என் படைப்பு <%S §¡¡” fro &5 இருந்தமைபற்றியே துணைவேந்தர் தி. மூ. நாராயணசாமி பிள்ளை, P. U. C. வகுப்பிற்கு அறிவிய லைத் தமிழில் கற்பிக்கும் முறைகளை ஆராயவும் இதற் குரிய கலைச் சொற்களைத் தொகுக்கவும் ஒர் ஆறுவாரக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்து என்னை அதற்குத் தலைவராக நியமித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் P. J. C. வகுப்பிற்குக் கற்பிக்கும் பலதுறை அறிவியல் ஆசிரியர்களும் இதில் கட்டாயமாகக் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தார். நான் 42 நாட்கள்