பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர. உலக ஊழியனார் 169 போனேன். திரு. தி.மு. நாராயணசாமி பிள்ளை (துணை வேந்தர்) கடிதம் எழுதி இங்கு வருமாறு அழைத்ததாகவும் அதனால்தான் வந்து பணியேற்றதாகவும் கூறினார். நான்கைந்து ஆண்டுகட்குமுன் நான் இங்கு இவரை நியமிப்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கூறினேன். * காக்கை உட்கார்ந்து பனம் பழம் விழுந்தது போலாயிற்று (காக தாளிய நியாயம்) என்றேன் . கொடுக்கின்ற தெய்வ மிருந்தால் கூரையைப் பொத்துக் கொண்டும் கொடுத்து விடும் என்ற பேச்சில் வழங்கும் பழமொழியை நினைத்துக் கொண்டேன். தம் வீட்டில் பகலுணவு கொள்ளுமாறு அழைத்தார் ஊழியர். நான் பையனைப் பல்கலைக் கழகத்திலும் உணவு விடுதியிலும் சேர்த்து விட்டு வருவதாகக் கூறினேன். வீட்டு முகவரி கொடுத்துவிட்டு முன்னதாக வீடு சென்றார். சிதம்பரத்தில் வீடு. என் வேலைகளை முடித்துக் கொண்டு சுமார் 11-30க்கு அவர் வீடு சென்றேன். நான் சென்ற போது வீட்டிற்குள் கணவன்-மனைவிக்குள் ஏதோ வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏ பிள்ளை. (இப்படித் தான் அவர் மனைவியை அழைப்பது) இன்றைக்கு நம் சண்டை வேண்டாம். நம்முடையதுறையூர் ரெட்டியார் வருகின்றார்' என்று ஊழியனார் சொன்னது எனக்குக் கேட்டது. அந்த அம்மையாரும் ரொம்ப ஒட்டாதே. ரெட்டியார் நம்மவர். நம்முடைய குடும்பச் சண்டையை அவர் நன்கு அறிவார். எல்லோர் வீட் டிலும் அடிக்கடி நடப்பது தானே. ’’ என்று சொல்லுவதும் கேட்டது. நான் வந்ததைத் தெரிவிக்கும் பாங்கில் ஒலி எழுப்பினேன். ரெட்டியார் வந்து விட்டார்’ என்று சொல்லிக் கொண்டே ஊழியரும் வெளியே வந்தார். அம்மையாரும் தொடர்ந்து வந்து என்னை வரவேற்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டிந்தோம். எப்படியோ