பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர. உலக ஊழியனார் 置”芷 இறைவன் இவனுக்கு என்ன வழிகாட்டுவானோ?’’ என்று மேலும் கூறினார். சற்று நேரம் கழிந்ததும் வெளியில் சென்றிருத்த மகனும் வந்து சேர்ந்தான். எல்லோரும் பகல் உணவு கொண்டோம். அம்மையார் அன்பாக உபசரித்தார். பண்படாத பண்பில் அன்பு நெகிழ்ந்தோடுவதைக் கண்டேன். பின்னர் சிறிது நேரம் உரையாடினோம். விடைபெற்றுக்கொண்டு அண்ணாமலைநகர் திரும்பினேன். என் மகன்.ஆங்கிலத்தில் பேசுவதைக் கற்றுக் கொள்வதற்கு நல்ல சூழ்நிலை அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். அன்றிரவே காரைக் குடிதிரும்பினேன். சில ஆண்டுகள் கழிந்தன. ஊழியனார் மறைந்த செய்தி என் காதுக்கு எட்டியது. மிகவும் வருந்தினேன். இவரைத் தில்லையில் கண்டதுதான் கடைசிமுறை. நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு. என்ற குறளை (குறள்-335) நினைத்துக் கொண்டேன். நிலையாமையின் பெருமையை” இக்குறளிலுள்ள பெருமை’ என்ற சொல் எவ்வளவு அற்புதமாகக் காட்டு கின்றது !