பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தலைமையாசிரியர் " இது. பி. ஆர். சுப்பிரமணிய பிள்ளை 15ங்க டம்பனைப் பெற்றவள் பங்கினை தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்துகி டப்பதே' இஃது அப்பர்தேவாரத்தில் புகழ்வாய்ந்த பாடல். அப்பர் பெருமானின் குறிக்கோளை நூற்பாப்போல் விளக்குவது. இத்திருக்குறுந்தொகையில் இறைவன் கடமையையும் தன் நிலையையும் அற்புதமாகத் தெளிவு படுத்துகின்றார் சொல் வேந்தர். இறைவனின் கடமை அடியாரைத் தாங்குதல்; அடியாரின் பொறுப்பு பணி செய்து கிடத்தல். இன்று நடைபெறுவது மக்களாட்சி. மக்களே இறைநிலையிலுள்ளனர். அனைத்து அரசு நிறுவனங்களிலும் பணியாற்றுவோருக்கு மக்கள்தாம் தேர்ந்தெடுத்த சட்ட மன்றங்கள் மூலம் நிதி ஒதுக்கிப் படி அளக்கின்றனர். நல்ல ஊதியம் பெறுகின்றனர் அரசுப் பணியாளர்கள் (Public Servants). Erih rep gli பணியாளர் என்ற உணர்ச்சியுடன் பணியாற்ற வேண்டும். எக்காரணத்தாலும் ஆணவம் மிகுந்து தாம் தலைவன்’ (Master) என்ற எண்ணமே அவர்களிடம் எழக்கூடாது, அலுவலகத்திற்குத் தேடி வரும் ஓர் ஏழையிடம் கூட 1. அப்பர் தேவாரம் 5: 19:9 (கடம்பூர்த் தேவாரம்.)