பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ஆசிரியர் பி. ஆர் சுப்பிரமணிய பிள்ளை 夏亨等 மரியாதையுடன் நடந்து உதவவேண்டும். இன்றைய நிலை என்ன? அமைச்சர் முதல் கடையூழியர் வரை எப்படி நடந்து கொள்கின்றனர்? அப்பர் பெருமானின் மனநிலைஎன் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நிலை-அவர்கள் மனத்தில் இருக்க வேண்டும். இருக்குமா? கயிலை நாதர் தான் இவர்களைத் தடுத்து-அவரவர்கள் செய்து வரும் அடாத செயல்களுக்கேற்ப-சில சங்கடங்களை அநுபவிக்கு மாறு செய்து, பின்னர் ஆட்கொள்ள வேண்டும். திரு பி. ஆர். சுப்பிரமணியம் அப்பர் பெருமானின் கொள்கையை அப்படியே பின்பற்றுபவர்; நூற்றுக்கு நூறு விழுக்காடு கடைப்பிடிப்பவர். இக்கால நிலைக்குச் சிறிதும் ஒவ்வாத பைத்தியம். 1950-60 இடையில் பணி யிலேயே காலமானவர். பணியேற்றநாள் தொட்டு (1941) பணிக்காலம் முடியும் வரையிலும் அப்பர் கொள்கையைக் கடைப்பிடித்த பைத்தியங்களுள் அடியேனும் ஒருவன். பணியின் பயனால், சேவையின் கனத்தால், ஒல்லும் வகையெல்லாம். சமூகப் பணி செய்ய என் ஆயுளையும் நீட்டித்து வருகின்றான்.இந்த இறைவன், இரண்டுபைத்தியங் களையும் இறைவன் ஓர் ஒன்பதாண்டுக்காலம் (1941-50) இணைபிரியாத நண்பர்களாக்கி வைத்திருந்தான். நான் துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியன் அவர், நாமக்கல் கழக உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர். எங்கள் இருப்பு 36 கல் தொலைவினால் பிரிக்கப் பெற்றி ருந்தாலும் உள்ளத்தால் நெருங்கியிருந்தோம் செயலாலும் ஒன்றுபட்டிருந்தோம். காரணம், எங்கள்.இருவர் கொள்கை யும் ஒன்றுபட்டிருந்ததால். ஏன்? ஒன்றேயாக இருந்ததால் என்று சொல்வதில் மிகை இல்லை. இந்த ஒன்பதாண்டுக் காலத்தில் நேரிட்ட நிகழ்ச்சிகள் மலரும் நினைவுகளாக’ வெளிப்படுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் நாங்கள் பகிர்ந்து கொண்ட முறைகளை இவை விளக்குவானவாக அமைகின்றன.