பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷7李 மலரும் நினைவுகள் திரு P.R.சுப்பிரமணியம் ஆத்தூர் (சேலம் மாவட்டம்) கழக உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றிய காலத்தில் எனக்கும் அவருக்கும் அதிகத் தொடர்பு இல்லை. ஆனால் அங்குத் தமிழாசிரியராகப் பணியாற்றிய திரு அ. சாம்பசிவம் என்பவர்மூலம் திரு. சுப்பிரமணி யத்தின் திறமை, நேர்மை, காலத்தைப் பொன்னெனப் போற்றிய சீர்மை, மாணவர்கள்பால் காட்டிவரும் அன்பு, பாசம் முதலியவை பற்றிக் கேள்வியுற்றிருந்தேன். அப்போது சேலம் மாவட்டம் கல்வி அதிகாரியாக இருந்தவர் திரு ருெ.து. சுந்தரவடிவேலு அவர்கள். இவரும் சுறுசுறுப்பும், திறமையும், ஆசியர்கள் பால் காட்டிய பரிவு, நேசம், பாசம் இவையும் சொல்வில் அடங்கா. இத்தகைய கல்வியதிகாரி திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்படாது போனது என் தவக்குறைவே எனக் கருது இன்றேன். ஆனால் திரு சாம்பசிவம் பிள்ளை என்ற கல்வியதிகாரியிடம் இவை அனைத்தையும் பெற்றேன்; என் திறமை, நேர்மை, முதலியவற்றைப் பாராட்டும் பேறும்பெற்றேன். திருசுப்பிரமணியமும்திரு. சாம்பசிவமும் மிக நெருங்கிப் பழகுபவர்கள். பிற்காலத்தில் ஒருமுறை (1952–57) சென்னைச் சட்டமன்றப் பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக உறுப்பினராகவும், (MIA) அதன் பிறகு இரண்டாண்டு இடைவெளி விட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் (M.LC) தேர்ந்தெடுக்கப்பெற்றார். மாணவர் நலன் : நாமக்கல் உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமையாசிரியராக மாற்றப்பட்ட பிறகுதான் திரு பி. ஆர். சுப்பிரமணியத்தித்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது: திரு சுப்பிரமணியம் ஆத்தூரில் பணியாற்றிய பொழுது திருக்குலத்து வகுப்பைச் (அரிசன்) சார்ந்த பிச்சுமணி என்ற மாணவன்பால் அதிக பாசத்தைக் காட்டினார்; பிச்சுமணி அடக்க ஒடுக்கமுள்ள மாணவன், படிப்பில் மிகவும் முன்னேற்றம் காட்டியவன். வகுப்பில்