பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 78 மலரும் நினைவுகள் லிருந்த போது இந்த இதழில் வெளியான கட்டுரைகளைப் படித்து அநுபவித்து மகிழ்ந்ததுண்டு. பேராசிரியர் இராகவன் அவர்களின் ஆழ்ந்த தமிழ், ஆங்கிலப் புலமை களை நன்கு அறிந்தவராதலால் திரு. பி.ஆர். சுப்பிர மணியம் அவர்கள் பேராசிரியர் இராகவனை வரவழைத்து மாவட்ட ஆசிரியர்கட்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையை இன்றும் (28-10-1989) நினைந்து நினைந்து மகிழ்கின்றேன். இந்த மாநாட்டிற்கு நானும் சென்றிருந் தேன். என்னையும் திரு. சுப்பிரமணியம் பேராசிரியர் இராகவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இக் காலத் தில் போடப்பெற்ற அறிமுக விதை நான் காரைக்குடிக்குச் சென்ற பிறகு (1950-60) தழைத்து வளர்ந்தது; அருகு போலும் வேரூன்றியது. இந்த மாநாட்டில் எனக்குக் கிடைத்த செல்வம் பல ஆசிரியர்களின் நட்பு; தோழமை. பள்ளிக் குடும்பங்கள் : நாமக்கல் கழக உயர் நிலைப் பள்ளி, துறையூர் சமீந்தார் உயர்நிலைப் பள்ளி இவை இரண்டும் அக்காலத்தில் முறையே திரு. சுப்பிரமணியமும் நானும் குடும்பத் தலைவர்களாக இருந்தவரை நெருங்கி இணைந்த குடும்பங்களாகத் திகழ்ந்தன. பள்ளி ஆண்டு விழாக்களை பிரம்மோற்சவம்' (பெருவிழா) போல் நடத்தி வந்தோம். நாமக்கல் விழாவிற்குப் போகும்போது நானும் சில ஆசிரியர்களும் சென்று பெருமை பெறுவோம். துறையூர் விழாவிற்குத் திரு. சுப்பிரமணியமும் சில ஆசிரியர்களும் வந்து எங்களைப் பெருமைப்படுத்து வார்கள். இக்காலத்தில் பெரிய மாநாட்டுப் பந்தலில் பிரமுகர்கட்கு இட ஒதுக்கீட்டைக் காட்டும் போக்கில் பெயரட்டைகளைப் பொருத்துவதுபோல், நானும் சிறப்பு விருந்தினர்கள் , பெற்றோர்கள் , மாணவர் கள்’, ‘மாணவிகள்', 'விழாச் செயலகம்’ என்ற பெயர் களை வெள்ளைத்தாள் ஒட்டிய அட்டைகளில் மாணவர் களைக் கொண்டே நல்ல வண்ணங்களில் அழகாக எழுதச் செய்து அவற்றை விழாக் கொட்டகையில் தூண்களில்