பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ஆசிரியர் பி. ஆர். சுப்பிரமணிய பிள்ளை 177 தாள்கள் அவர்மூலம் தயார்செய்யப்பெற்றன: துறையூரில் பொதுக் கணிதம், சிறப்புக் கணிதம், பொது அறிவியல் இவை பற்றிய மாதிரித்தாள்கள் என்னால் தயார் செய்யப் பெற்றன. இவற்றை அச்சிடும் பொறுப்பை நான் மேற் கொண்டிருந்தேன். கணிதம், அறிவியல் இவற்றைக் கற்பிப்பதில் சிறந்த வல்லுநன் என்ற பெயர் பெற்றிருந்தவ னாதலால் எனக்கு இவற்றில் பொறுப்புகள் தரப்பெற்றன. எங்கட்கு 100 படிகள் தேவைப்பட்டன; நாமக்கல் பள்ளிக்கு 200 படிகள் தேவைப்பட்டன. செலவை 1:2 விகிதத்தில் பகிர்ந்துகொண்டோம். சனவரி, பிப்பிரவரியில் இத் தேர்வுகள் நடத்தப்பெற்றன. இத்தேர்வுகளினால் மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் கண்டோம். பள்ளியிறுதித் தேர்வில் இரண்டு பள்ளிகளிலும் மாணவர் கள் அதிகமான மதிப்பெண்கள் பெற்றதைக் கண்டு மகிழ்ந் தோம். மாவட்ட ஆசிரியுர் மாநாடு : 1949-பிப்ரவரி என நினைக்கின்றேன். சேலம் மாவட்ட ஆசிரியர் சங்க மாநாடு ஒன்று நாமக்கல்லில் நடைபெற்றது. திரு. சுப்பிரமணியம் தான் இப் பொறுப்பை ஏற்று நடத்தினார். சுமார் 12 ஆசிரியர்கள் மிகச் சிறப்புடன் உதவியதால் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஆசிரியர்கள் திரு . சுப்பிரமணியத்திடம் எவ்வளவு அன்பு காட்டினார் கள் என்பதை நேரில் கண்டேன். இதனால் திரு. சுப்பிரமணியம் ஆசிரியர்களிடம் எப்படிப் பழகி யிருக்கவேண்டும் என்பதையும் கணிக்க முடிந்தது; இந்த மாநாட்டில் சிறப்புச் சொற்பொழிவாற்றியவர் பேராசிரியர் அ. சீநிவாசராகவன் அவர்கள். சென்னை விவேகாநந்தா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பெரும் புகழுடன் பணியாற்றியவர். பள்ளி நிர்வாகத் திடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் பதவியைத் துறந்து சிந்தனை” என்ற மாத இலக்கிய இதழின் ஆசிரிய ராக இருந்து பலரைச் சிந்திக்கவைத்தவர். நான் துறையூரி பல நி- 12 -