பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 76 மலரும் நினைவுகள் அவனைத் திருப்பியனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்: தேன். திரு. சுப்பிரமணியம் நாமக்கல்லுக்கு மாற்றப்பட்ட பிறகும் பிச்சுமணி வழக்கமாக என்னிடம் வந்து கொண் டிருந்தான். என் உதவியும் தொடர்ந்து அவனுக்குக் கிடைத்தது. மாணவர்க்குத் தேவையான குறிப்பேடு களையும் குறைந்த விலைக்கு அரசுமூலம்தாள்கள் வாங்கித் தயாரித்து வழங்கும் முறையும் பள்ளியில் இருந்து வந்தது. சந்தையில் தாள் கிடைக்காத காலம் அது.இந்தப் பணி திரு V. S. உமாபதி, திரு. T. S.இராமய்யா (இடைநிலை ஆசிரியர்கள்) பொறுப்பிலிருந்து வந்தது. அவர்களிடம் சொல்லி பிச்சுமணிக்குத் தேவையான குறிப்பேடுகளை பள்ளிக்கணக்கில் இலவசமாகவும் வழங்கச் செய்தேன். பிச்சுமணி பள்ளியிறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றான். கல்லூரியிலும் முதல் நிலை. பொறியியல் கல்லூரியில் சேர்ந்து B.E. பட்டம் பெற்று தில்லி மாநகரில் நடுவண் அரசுப் பணியில் அமர்ந்து நல்ல ஊதியமும் பெற்றுக்கொண்டிருந்தான். அரசு மூலம் அமெரிக்காவுக்கும் அனுப்பப் பெற்றான். இப்போது பணத்தில் மிதக்கின்றான். பொன் மனச்செம்மல் எம். ஜி. ஆர். அமெரிக்காவுக்குச் செல்லும்போதெல்லாம் அவரிடம் தொடர்பு கொண்டிருப்பதாகவும் செவி வழிச் செய்தி என்னை எட்டுகிறது! இப்போது ஒய்வு பெற்று ஏதாவது சுயத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இப்படி நானும் பிள்ளை அவர்களும் எத்தனையோ பேர்கட்கு உதவியிருக்கின்றோம். நாமக்கல் வந்த பிறகு திரு. பி. ஆர் சுப்பிரமணியமும் நானும் அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்புகள் இருந்தன. கடிதத் தொடர்புகளும் அதிகமாக இருந்து வந்தன. திரு. சுப்பிரமணியம் நாமக்கல்லில் இருந்தவரை பள்ளி யிறுதித் தேர்வு மாணவர்க்காக ஆங்கிலம்-2 தாள்கள், பொதுக்கணிதம், சிறப்புக் கணிதம் (Optional) சமூக இயல், பொது அறிவியல் பாடங்களில் நான்கு மாதிரித்