பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மலரும் நினைவுகள் இதனைத் தன் தமையனிடம் சொன்னாள். பள்ளி மாணாக்கர்கள் வீடு திரும்பும் போது அம் மாணாக்கனை யும் அடையாளம் காட்டினாள். அவனுக்குப் பாடம் புகட்டுவதற்குத் தயாராகச் செருப்பும் கையுமாகப் புறச் சுவருக்கு வெளியே காத்திருந்த அப் பெண்பிள்ளையின் தமையன் (தன் முரட்டுத் தன்மையை முழுமையாகக் காட்டும் நிலையில்) அம்மாணாக்கனின் குடுமியையும் கை களையும் எட்டிப் பிடித்துக் கொண்டான். தன் கைகளி லுள்ள செருப்பினால் நையப் புடைத்தான். சுமார் ஒன்றரை ஃபர்லாங்க் தொலைவிலுள்ள வீடுவரையிலும் செருப்படிகளையும் அறிவுரைகளையும் மாறிமாறி வழங்கிய வண்ணம் அம் மாணவனை வீடு வரையிலும் நடத்திச் சென்று தந்தையிடம், பெரியீர், தும் மகனைக் கவனத்துடன் வளர்த்துவாருங்கள். நெறிபிறழ்ந்தநடத்தை யைத் தவிர்க்க வழி காணுங்கள்' என்று கூறிவிட்டு அவருடைய மறு மொழிக்குக் காத்திராமல் வேகமாகத் திரும்பி விட்டான். இம்மாணவனின் தந்தை அதிர்ந்து போனார். பெண் பிள்ளையும் பெரிய இடத்தைச் சார்ந்தவள் என்பதையும் அறிந்து கொண்டார். செயலற்றுப் போனார். இவருக்கு அரசியல் செல்வாக்கு உண்டு. அப்பொழுது மாண்புமிகு கல்வியமைச்சராக இருந்தவர் திரு. தி. சு. அவினாசி லிங்கம் செட்டியாரவர்கள். மாவட்டப் பள்ளிகளின் பொறுப்பு (தேர்தல் நடைபெறாததால்) ஒரு தனி அலுவலர் கையிலிருந்தது. பையனின் தந்தை ஏதோ ஒர் அலுவல் நிமித்தம் கரூரில் இருக்க நேரிடுகின்றது. மாணவனின் அடிபட்ட நிலை தலைமையாசிரியர் காதுக்கும் எட்டி விடுகின்றது. இப்படிப் பல நிகழ்ச்சிகள். எல்லாம் பள்ளி ஒழுங்கு முறையை எதிர்ப்பவை. பையன் பள்ளியிறுதித் தேர்வில் தவறிவிட்டான். தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் எல்லோரையுமே இடமாற்றுச் சான்றிதழ்களுடன்