பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ஆசிரியர் பி. ஆர். சுப்பிரமணிய பிள்ளை 181 வெளியே அனுப்பப் பெறுகின்றனர். இந்தக் குறிப்பிட்ட மாணவன் மீண்டும் பள்ளியில் சேர விரும்புகின்றான். தலைமையாசிரியர் தேர்ச்சியடையாத மாணவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்லை எனக் கூறுகின்றார். செல்வாக்குள்ள தந்தை-காங்கிரஸ் கட்சியில் நாடளாவிய புகழ்பெற்றவர்-மாண்புமிகு கல்வி அமைச்சருக்கே இது குறித்துக் கடிதம் எழுதுகின்றார். இக்கடிதம் மாவட்டத் தனி அதிகாரிக்கு அனுப்பப்பெறுகின்றது. இந்த அதிகாரி நாமக்கல்லுக்கு முகாம் போடுகின்றார். பயணியர் விடுதி யில் தங்கிக் கொண்டு தலைமையாசிரியருக்குச் சொல்லி யனுப்புகின்றார். பையனைச் சேர்த்துக் கொள்ளுமாறு வாய்மூலம் ஆணையிடுகின்றார் தனி அதிகாரி. தலைமை யாசிரியர் பையனுடைய திருவிளையாடல்களை எடுத்துக் கூறி, இப்படிப்பட்ட பையனை, அதுவும் அதிகார பலத் தால், சேர்த்துக் கொண்டால் பள்ளி ஒழுங்கு முறை மேலும் கெடுவதற்கு வாய்ப்பு நேரிடும் என்பதை விளக்கு கின்றார். ஆகவே, பையனைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று கூறி விடுகின்றார். அதிகாரி மேலும் மேலும் வற்புறுத்த, பெற்றோர் அமைச்சருக்கு எழுதிய கடிதத் தின் மீது பையனைச் சேர்த்துக் கொள்ள எழுத்து மூலம் ஆணை பிறப்பித்தால் சேர்த்துக் கொள்ள யோசிக்கலாம் என்று தலைமையாசிரியர் கூறுகின்றார். அதிகாரிக்கு ஆணை பிறப்பிக்கும் துணிவு இல்லை. விவரம் அறிந்த பிறகு எப்படித் துணிவு பிறக்கும்? செயலாற்ற முடியாமல் வாளா திரும்பி விடுகின்றார். அடுத்து, ஊரிலுள்ள சில பிரமுகர்கள் பையனை எப்படியாவது சேர்த்துக் கொள்ளுமாறுவேண்டுகின்றனர். இம்மாதிரி பரிந்துரைகட்கு இடம் அளித்தால் பள்ளி திறம் பட இயங்குவதற்குக் குந்தகம் விளையும் என்று கூறி, பையனே தன்னைத் தனிமையாகச் சந்தித்துத் தான் இது காறும்பள்ளியின் ஒழுங்குமுறைக்குமாறாக நடந்துகொண்ட தற்கு வருந்துவதாகவும் இனி பள்ளி ஒழுங்கு முறைக்குக்