பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 மலரும் நினைவுகள் கட்டுப்பட்டு நடப்பதற்கு உறுதி கூறுவதாகவும் அப்படி ஏதாவது பள்ளி நெறிமுறைகட்கு மீறி நடந்து கொண் டால் பள்ளித் தலைமையாசிரியர் தன்னை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதற்குத் தான் ஒப்புவதாகவும் எழுதிக் கொடுத்தால் பையனுக்கு இடந்தரலாம் என்று அவரி களிடம் தெரிவிக்கின்றார். ஒரு நாள் பையன் தனிமையில் சந்தித்து இதைச் செய்ய, பையன் சேர்த்துக் கொள்ளப் படுகின்றான். இப்படிப் பள்ளி ஒழுங்கு முறையைக் கண் போல் காக்கின்றார் தலைமையாசிரியர். இன்னொரு நிகழ்ச்சி: இந்தப் பெற்றோருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு தமிழாசிரியர் பள்ளி ஒழுங்கு முறைக்குக் குந்தகம் விளையும் போக்கில் நடந்து கொள்ளு, கின்றார். தலைமையாசிரியரின் கட்டளைகட்குப் பணியாமை, பையன்களைத் தலைமையாசிரியருக்கு எதிராகத் துரண்டி விடுதல், நேரத்துக்குப் பள்ளிக்கு. வராமை, வந்தாலும் சரியாக வகுப்பிற்குப் போகாமை, அப்படிப் போனாலும் பாடத்தை நடத்தாமல் அரசியல் பேச்சுகளைப் பேசி காலத்தை வீணடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர். இவர் மீது மேலிடத்திற்குப் புகார் எழுதி இவரை வேற்றுாருக்கு மாற்றி விடுகின்றார் பி.ஆர். சுப்பிரமணியம். இந்தத் தமிழாசிரியரை மீண்டும் நாமக்கல்லுக்குக் கொண்டுவரும் திருப்பணியில் ஈடுபடு கின்றார் மேற்குறிப்பிட்ட பையனின் தந்தையார். இதில் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றார். மாவட்டத் தனி அதிகாரி பள்ளியைப் பார்வையிடும் போக்கில் நாமக் கல்வில் முகாம் போடுகின்றார். தலைமையாசிரியரைத் தனிமையில் சந்தித்துத் தமிழாசிரியர் மீண்டும் நாமக் கல்லுக்கு மாற்றம் செய்ய ஒருப்படுமாறு வேண்டுகின் றார் . ஐயா, நான் திருநெல்வேலிக்காரன். என் ஊரில் இருந்தால் எனக்கு செளகர்யம். பிழைப்பிற்காக ஊரை விட்டு வந்து விட்டேன். எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். தமிழாசிரியர் இங்கு வருவதற்குப் பிறப்பிக்கும்