பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தி. மூ. நாராயணசாமி பிள்ளை ஒழுக்கம் விழுப்பம் தரவான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்!" எந்தப் பொறுப்பிலிருந்தாலும் நேர்மையைக் கடைப் பிடித்தல், வைணவத்தில் ஆழ்ந்த பற்றுடைமை, ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்படுதல், பிற சமயங் களில் காழ்ப்பின்றி சமரச நோக்குடைமை, தாய்மொழிப் பற்று அமைதியான போக்குடைமை, சாதி வெறி யின்மை, நாட்டுப் பற்றுடைமை -இவை யனைத்தும் உருண்டு திரண்டு ஒன்றான தன்மையையுடைய சான் றாளர்தாம் திரு. தி. மூ. நாாாயணசாமி பிள்ளை. வழக்குரைஞர் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தினாலும் பிற பொறுப்புகள்தாம் அவருடைய வாழ்க்கையை மேம்படுத்தின. ஒல்லும்வகை யெல்லாம் நேர்மையாகப் பணியாற்றினமையால் அவர்தம் வாழ்க்கை வளமாக அமைந்தது; அனைவராலும் போற்றம் பெறும் புகழும் அவரை வந்தடைந்தது. தோன்றில் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று." என்ற வள்ளுவர் வாக்கிற்கும் இலக்கியமாக இவர் நீடிய வாழ்க்கையும் அமைந்தது. திருச்சி மாவட்டக் கழகத் 1. குறள்-131 2. டிெ-236