பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மலரும் நினைவுகள் தலைவர், இந்து அறநிலைய வாரியத் தலைவர், பொதுப் பணியாளர் தேர்வு ஆணையத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் (ஆறு ஆண்டுகள்), தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவர் இன்னோரன்ன பல பெரிய பொறுப்புகளை வகித்த பெரியார் இவர். இப் பொறுப்புகளை வகித்தபோது நேரிய போக்கையே கடைப்பிடித்தார். பல்லோர் போற்ற வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்தார். இவர்தம் வாழ்க்கை பிறருக்கு எடுத்துக் காட்டாகவும் அமைந்தது. 1934-இல் நான் முசிறி கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் (ஆறாவது படிவம்) படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது திரு பிள்ளையவர்கள் திருச்சி மாவட்டக் கழகத் (District Board) தலைவராக இருந்தார். அந்த ஆண்டில் சனவரி என நினைக்கின்றேன்; கழகத் தலைவர் பள்ளியைப் பார்வையிடுவதற்காக வந் திருந்தார். அந்தக் காலத்தில் தலைவர் பார்வையிட வரு கின்றார் என்றால் பள்ளியே கலகலத்து விடும். ஆசிரியர் கள் நல்ல ஆடையில் தோன்றுவார்கள்: வாரக்கணக்கில் முகச்சவரம் செய்து கொள்ளாதிருக்கும் கீழ் வகுப்பு ஆசிரியர்கள் கூட சுத்தமான முகத்துடன் காணப்படுவார் கள். மாணவர்களும் மிகவும் தூய்மையான தோற்றம் அளிப்பார்கள். அக்காலத்தில் கே. ஆர் என வழங்கும் திரு. கே. இராமச்சந்திர அய்யர் என்ற கணித ஆசிரியர் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டியதால் மிக்க புகழுடன் திகழ்ந்தார். இவருடைய தனிப்பட்ட முயற்சி யினால்தான் மாணவர் விடுதி தொடங்கப்பெற்று மிக நன்முறையில் இயங்கி வந்தது. அதன் காப்பாளர் பொறுப்பும் இவரிடம் இருந்து வந்தது. இந்த ஆசிரியர் என்னை திரு. பிள்ளையவர்களிடம், சுப்பு நல்ல மாணாக்கன்; படிப்பில் ஆர்வம் மிக்கவன். பள்ளியிலேயே (வகுப்பிலேயே) முதல்வன். இவன் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினால் மிக்க புகழுடன் திகழ்வான். இவனுக்கு