பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. மு. நாராயணசாமி பிள்ளை 3. எந்த உதவி கிடைத்தாலும் தகும்' என்று அறிமுகப் படுத்தி வைத்தார். இந்த அறிமுகம் திரு. பிள்ளையவர்கள் திருநாடு அலங்கரிக்கும் வரை நாற்பதாண்டுக் காலம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. இறையருளால் பல இக்கட்டுக்களிடையில் என் கல்லூரிப் படிப்பும் தொடர்ந்தது.பொருளாதாரத் தட்டுப் பாடு இருப்பினும் நிலத்தினை ஒன்றுக்குப் பாதியாக விற்று அந்த ஆண்டுக்குத் தேவையான ரூ. 500/- தயார் செய்து கொண்டு திருச்சிக்கு வந்து விடுவேன். புனித சூசையப்பர் கல்லூரியில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்து எடுத்துக் கொண்டுபடித்தேன். அக்காலத்தில் பிள்ளையவர்கள் புகழ் வாய்ந்த வழக்குரைஞராகத்திகழ்ந்தவர். இவர் அலுவலகம் திருச்சி பெரிய கடை வீதியில் மலைக்கோட்டைக்கருகில் இருந்தது. அடிக்கடி இல்லா விடிலும் சில சமயங்களில் திரு பிள்ளையவர்களைப் பார்ப்பதுண்டு. திரு பிள்ளை யவர்கள் திருமண்காப்பு அணிந்த திருமுக மண்டலத் துடனும் நல்ல முகப்பொலிவுடனும் திகழ்வார். என்னை முதுகில் தட்டிக்கொடுத்து நீ தானே கே. ஆர் என்பவ ரால் அறிமுகப் படுத்தப்பெற்ற மாணவன். நன்கு படி. ஏதாவது உதவி தேவைப்பட்டால் துணிவாகக் கேள். அடிக்கடி வந்து கொண்டிரு என்று அறிவுரை கூறி ஆசீர் வதிப்பார்.நானும்அவரைக் காக்கும்.கடவுள்திருமாலாகவே எண்ணி தொடர்பு வைத்துக் கொண்டிருந்தேன். அக் காலத்தில் இவரது அலுவலகத்தில் திரு. M. முத்துசாமி பிள்ளை. திரு செங்கமலம் பிள்ளை என்ற இளைஞர்களும் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வந்தவர்கள். 1939இல் பி. எஸ்சி பட்டம் பெற்றேன். முதல் வகுப்பில் கல்லூரியில் முதல் மாணவனாக (பல்கலைக் கழகத்தில் மூன்றாவது மாணவனாக)த் தேர்ந்தேன். ஓராண்டுக் காலம் உத்தியோக வேட்டை. மூன்று பேர்ச்