பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மலரும் நினைவுகள் சான்றிதழ்கள் இதற்குத் தேவைப்பட்டன. திருச்சியில் மிக்க புகழோங்கி இருந்தவர் சர். டி. தேசிகாச்சாரி. மாவட்ட நீதிமன்றத்துக்கருகில் ஒரு திருமாளிகையில் குடி யிருந்தார். இருப்பூர்தித் துறையிலும் பிற பொதுநிறு வனங்களிலும் மிக்கசெல்வாக்குடன் திகழ்ந்தவர்.இவரிடம் ஒரு சான்றிதழ் பெற்றேன். அப்போது இருப்பூர்தித் துறையில் பெரிய அலுவலில் இருந்த திரு. நந்திரெட்டியா ரிடம் கடிதம் பெற்றுக் காட்டுப்புத்துார் மிட்டாதார் திரு கே. எஸ். சப்தரிஷி ரெட்டியார் M.L. C. என்ற பெரிய வரிடம் மற்றொரு சான்றிதழ் பெற்றேன். திரு. பிள்ளை யவர்களிடம் ஒன்றைப் பெற்றேன். முதலாவது பெற்றது கல்லூரி முதல்வருடையது. மூன்று சான்றிதழ்களில், ஒன்று அண்மையில் பெற்றதாக இருத்தல்வேண்டும். திரு. பிள்ளையவர்களின் சான்றிதழை மட்டிலும் புதுப்பித்துக் கொண்டிருந்தேன். இதற்கு உதவியவர் திரு. முத்துசாமி பிள்ளை. இருமுறை பொதுப்பணியாளர் ஆணையத்தின் மூலம் முயன்றேன்; வேலை கிட்டவில்லை. யாராவது பெரியவர்களின் பரிந்துரையின்றி முயல்வதில் பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். இந்த முயற்சியையும் கைவிட்டேன். 1940 மார்ச்சு வாக்கில் ஆசிரியர் பயிற்சிக் கல்லுரரியில் (சைதாப்பேட்டை) சேர்வதென முடிவு கட்டி விண்ணப் பித்தேன். பல ஆண்டுகள் முயன்றும் இடம் கிடைக்காத வர்களும் உண்டு. முதல் வகுப்பில் தேறியிருந்தமையாலும் கணிதம், அறிவியல் ஆசிரியர் பஞ்சம் இருந்தமை. யாலும் உடனே இடம் கிடைத்தது: சேர்ந்து படித்து எல். டி. பட்டமும் பெற்றேன். நான் சைதையில் படிக்கும் போது மாணவர் விடுதியில்தான் தங்கியிருந் தேன் (1940 - 41). இக்காலத்தில் திரு பிள்ளையவர்கள் இந்து அறநிலையத்துறையில் தலைவராக இருந்தார்; தியாகராய நகரில் குடியிருந்தார். இந்தக் காலத்தில் அவர் தொடர்பு அறாதிருக்கும் பொருட்டு இருமுறை சந்தித்து ஆசி பெற்றேன். திரு பிள்ளையவர்களும் என்னை மறக்